»   »  லட்சுமி ராயுடே கதா

லட்சுமி ராயுடே கதா

Subscribe to Oneindia Tamil

பெல்காம் பேரழகி லட்சுமி ராய் மலையாளத்தில் படு வேகமாக பிசியாகிக் கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவுக்கு கன்னடம் தந்த பைங்கிளிகள் நிறைய. அந்தக் காலத்தில் சரோஜாதேவி. அவருக்குப் பிறகும் நிறையப் பேர் வந்தனர். லேட்டஸ்டாக பல லஜ்ஜாவாதிகள் கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்து கொண்டும், போய்க்கொண்டும் உள்ளனர். அவர்களில் லட்சுமி ராயும் ஒருவர்.

படு ஆரவாரமான அழகுடன் இருந்தபோதிலும் லட்சுமிக்கு தமிழில் சிறப்பான எதிர்காலம் இல்லாமல் போய் விட்டது. இதனால் கன்னடத்துக்குத் திரும்பிய லட்சுமி ராய் அப்படியே மலையாளத்துக்கும் விசிட் அடித்துள்ளார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் ராக் அண்ட் ரோல் என்ற படத்தில் ஜோடி போட்டு நடிக்கவுள்ளார் லட்சுமி ராய். இப்படத்தில் பாடகி வேடமாம் அவருக்கு (மைக் மோகினி). ஒரு பிரபல பின்னணிப் பாடகியை குறிக்கும் கேரக்டராம் இது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் கூறுகையில், இது ஒரு ஜாலியான அதேசமயம், அதி வேகமான திரைக்கதையுடன் கூடிய நல்ல படம். இப்படத்துக்காக மோகன்லால் 60 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார். காலாபாணி படத்துக்குப் பிறகு இப்படத்துக்குத்தான் மோகன்லால் அதிக கால்ஷீட் கொடுத்துள்ளார் என்றார்.

இதற்கு மரியாதை செய்யும் விதமாகத்தான் மோகன்லாலுக்கு இப்படத்தில் ரூ. 1.25 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாம். மலையாள திரையுலகிலேயே முதல் முறையை ஒரு கோடி சம்பளத்தைத் தொட்ட முதல் நடிகர் மோகன்லால்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்லாலின் ஒரே போட்டியாளரான மம்முட்டியின் சம்பளம் 50 முதல் 70 லட்சத்திற்குள் இருக்கிறது. தமிழில் அவருக்கு 40 லட்சம் சம்பளம் தருகிறார்கள்.

வர்த்தகரீதியில் இப்படத்தை உருவாக்க முடிவு செய்ததால் படத்தில் பல மசாலா ஐட்டங்களை சேர்த்துள்ளனர். அதில் ஒன்றுதான் லட்சுமி ராய். கிளாமர் காட்டதக் தயங்கவே தயங்காத நாயகியாக வேண்டும் என்று விரும்பித்தான் லட்சுமி ராயைப் போட்டுள்ளனர். அவரிடம் முதலிலேயே கிளாமர் குறித்துப் பேசி விட்டார்களாம்.

லட்சுமி ராயிடம் படத்தின் கதையைக் கூறியவுடன் அவர் ஓ.கே. சொல்லி விட்டாராம். இதுகுறித்து லட்சுமி ராய் கூறுகையில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது ஒவ்வொரு நடிகைக்கும் கனவு போல. எனக்கு இயக்குநர் போன் பண்ணி நடிக்க முடியுமா என்று கேட்டவுடனேயே கதையைக் கூட கேட்காமல், ஒத்துக் கொண்டு விட்டேன்.

எனக்கு இது மலையாளத்தில் 2வது படம். முதல் படம் பழசிராஜா. அதிலும் மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மம்முட்டிதான் நாயகன் என்பதால் எனக்கு பெருமையாக உள்ளது என்றார் பூரிப்புப் பொங்க லட்சுமி ராய்.

ரொம்ப பொங்கிடாம லட்சுமிக்கா!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil