»   »  பாரீசுக்குப் போகிறேன்!- லட்சுமி மேனன்

பாரீசுக்குப் போகிறேன்!- லட்சுமி மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டாலும், இப்போதைக்கு எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் பாரீசுக்குப் போகவிருக்கிறேன், என்கிறார் லட்சுமி மேனன்.

தமிழ் சினிமாவின் அதிர்ஷ்ட தேவதையாகத் திகழ்கிறார் லட்சுமி மேனன். நடித்த அத்தனை படங்களும் வெற்றிப் படங்கள். இயக்குநர்கள், ஹீரோக்கள், முக்கியமாக தயாரிப்பாளர்கள் அதிகம் விரும்பும் நடிகையும் இவரே.

திடீரென்று இவர் திரையுலகை விட்டு விலகப் போவதாக செய்திகள். விசாரித்தால், அதெல்லாம் புரளி. இப்போது சிப்பாய் படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து அஜீத், சிம்பு படங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் லட்சுமி மேனன் அமைதி காக்கிறார்.

நிறைய பேரை சுத்த விட்டிருக்கேன்

நிறைய பேரை சுத்த விட்டிருக்கேன்

திருமணம் பற்றிக் கேட்டால், "நான் திருமணத்துக்கு இன்னும் தயார் ஆகவில்லை. இப்போதைக்கு நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். தனியாக இருப்பது சந்தோஷம் அளிக்கிறது. நிறைய ஆண்களை நான் சுத்தலில் விட்டிருக்கேன். எனவே காதல் கல்யாணம் போன்றவற்றை இப்போதைக்கு ஏற்கும் நிலையில் இல்லை.

விஷாலுடன்

விஷாலுடன்

விஷாலும் நானும் நல்ல நண்பர்கள். அதற்கு மேல் ஒன்றுமில்லை. எல்லா விஷயங்களையும் அவரிடம் மனம் விட்டு பேசுவேன். எல்லா படங்களிலும் குடும்ப பாங்கான கேரக்டர்களில் நடித்து இருக்கிறேன். இயக்குநர்கள் அதுமாதிரி கேரக்டர்களில் நடிக்கவே என்னை அணுகுகின்றனர்.

விலகமாட்டேன்

விலகமாட்டேன்

நான் சினிமாவை விட்டு விலகப் போவதாக செய்திகள் பரவி உள்ளன. அப்படி யாரிடமும் நான் சொல்லவில்லை. தொடர்ந்து படங்கள் ஒப்புக் கொண்டுதான் இருக்கிறேன்.

பாரீஸ்

பாரீஸ்

ஆனால் கொஞ்சம் ஓய்வு வேண்டும். அதன் பிறகு மீண்டும் நடிப்பேன். இப்போதைக்கு பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு சுற்றுப் பயணம் செல்ல ஆர்வமாக உள்ளேன். அடுத்து அஜீத் படத்தில் அவரது தங்கையாக நடிக்க என்னிடம் கேட்டுள்ளனர். நான் இன்னும் முடிவு செய்யவில்லை," என்றார்.

English summary
Kollywood's lucky muscott Lakshmi Menon wants to take a break and relaxing in Paris.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil