»   »  பிரியாணி லேகா வாஷிங்டன்!

பிரியாணி லேகா வாஷிங்டன்!

Subscribe to Oneindia Tamil

வழக்கமான நடிகைகளைப் போல இல்லாமல் பலவித திறமைகளுடன் படு ரவுசாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்துள்ளார் விஜே லேகா வாஷிங்டன்.

எஸ்.எஸ்.மியூசிக் ரசிகர்களை மயக்கிக் கொண்டிருக்கும் தாரகைதான் லேகா வாஷிங்டன். சென்னைக்காரப் பொண்ணான இவர் இப்போது சிம்புவுடன் கெட்டவன் படத்தில் ஜோடி போடுகிறார். தயிர் என்ற செல்லப் பெயருடன் அய்யராத்து மாமி வேடத்தில் நடிக்கும் லேகா பல திறமைகளை தனக்குள் பதுக்கி வைத்திருப்பவர்.

டிவியில் விஜே, மாடலிங், குறும்பட இயக்குநர் என பல அவதாரத்துடன் திகழும் லேகாவுக்கு, சிற்பம் வடிக்கவும் தெரியுமாம். தேசிய வடிவமைப்புக் கழகத்தில் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ள லேகா, விஜேவாக வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருந்த நிலையில்தான் சிம்புவின் கண்ணில் பட்டு அவருக்கு ஜோடியானார்.

வெளி அழகை விலாவாரியாக பேணிக் காக்கும் லேகா, உடல் நலத்தையும் படு ஃபிட் ஆக வைத்துக் கொண்டிருக்கிறார். மாடலிங் செய்கிறவர்களுக்கு சுவர் (உடல் வளம்) ரொம்பவும் முக்கியம் என்பதால் சித்திரம் வரைய தோதாக தனது உடலையும், அழகையும் ஒரு சேரப் பேணிக் காக்கிறாராம் லேகா.

அதற்காக வாய்க் கட்டுப்பாடு எல்லாம் லேகாவிடம் கிடையாதாம். கிடைத்ததை நொறுக்கி உள்ளே திணிக்கும் கேரக்டராம் லேகா. இருந்தாலும் உடல் எடை உப்பிப் போய் விடாமல் படு கவனமாகவும் இருந்து கொள்கிறாராம்.

லேகாவுக்கு ரொம்பப் பிடித்தது பிரியாணியாம். எந்த வகை பிரியாணியாக இருந்தாலும் பிரித்து மேய்ந்து விடுவாராம். அதேபோல பழங்கள் என்றாலும் விரும்பி விழுங்குவாராம். சாலட் கொடுத்தால் நம்மை நல்லாயிருங்க என்று வாழ்த்துவார் லேகா.

மாடலிங் செய்கிறீர்கள், விஜேவாக இருக்கிறீர்கள், சிற்பக் கலையும் தெரிகிறது, சினிமாவுக்கும் வந்து விட்டீர்கள். அடுத்து என்ன பிளான் என்று லேகாவிடம் கேட்டால், எனக்கு எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் உண்டு.

ஒரு இடத்தில் சோம்பிப் போய் உட்கார்ந்திருக்க பிடிக்காது. சுறுசுறுப்பாக இருக்கப் பிடிக்கும். எனவேதான் சினிமா வாய்ப்பு வந்த போது கூட உடனே ஒ.கே. சொல்லி விட்டேன். அதிலும் சிம்பு போன்ற சிறப்பான சிற்பியின் கையில் கிடைத்திருப்பதால் எனது நடிப்புத் திறமையை நன்றாக செதுக்கி மெருகேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

இப்போது நடிகையாகவும் மாறியுள்ளேன். அடுத்து என்ன ஆவேன் என்று எனக்குத் தெரியாது. வருவதை எதிர்கொள்ளும் கேரக்டர் நான் என்றார் படா நம்பிக்கையோடு.

பலே லேகா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil