»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனது சாவுக்கு காதலர் ரமேஷ் தான் காரணம் என்று நடிகை விஜி கடிதம் எழுதி வைத்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட விஜியின் வீட்டில் ஒரு மினி ஆடியோ கேசட் கைப்பற்றப்பட்டது. அத்துடன் 4 கடிதங்கள் இருந்தன.

முதல்வருக்குக் கடிதம்:

தற்கொலை செய்து கொண்ட நடிகை விஜி, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், எனக்குநீங்கள் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறீர்கள். கடைசியாக இந்த ஒரு உதவியையும் செய்ய வேண்டிக் கொள்கிறேன்.

தயவு செய்து என் உடலை போஸ்ட் மார்டம் செய்ய வேண்டாம். என் உடலை அப்படியே என் தந்தையிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று எழுதியிருந்தார்.

அப்பாவுக்குக் கடிதம்:

விஜி தனது அப்பாவுக்கு எழுதிய கடிதத்தில் நமது சொத்துக்கள் அனைத்தையும் விற்று விடுங்கள். உங்கள் வாழ்வுக்குத் தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு மீதியை அனாதை இல்லங்களுக்கு வழங்கி விடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இன்னொரு கடிதத்தை வக்கீலுக்கு எழுதியுள்ளார். அதிலுள்ள விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

நின்று கொல்லும் தெய்வம்:

பத்திரிக்கைகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தன் காதலன் ரமேஷ் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

அதில் கடவுள் இருப்பது உண்மையானால் ரமேஷ் நிச்சயம் உனக்குத் தண்டனை கிடைக்கும். நான் சாவதற்கு ஒரே காரணம் நீதான். உன் மனசாட்சிக்குஎல்லா விஷயமும் தெரியும். இதற்கான தகுந்த ஆதாரங்களை நான் பத்திரிக்கைகளுக்கு அனுப்பியுள்ளேன். உண்மைகள் வெளிவந்தே தீரும் என்று அந்தக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆடியோ கேசட்டில் ரமேஷ் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதை பதிந்து வைத்திருக்கிறார். அந்த ஆதாரம் ரமேஷைக் கைது செய்யப்போதுமானதா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

Read more about: actress, capture, residence

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil