»   »  இனிமேல் 'நோ சரக்குப் பார்ட்டி'!- தனுஷ் நாயகியின் திடீர் முடிவு

இனிமேல் 'நோ சரக்குப் பார்ட்டி'!- தனுஷ் நாயகியின் திடீர் முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

இனிமேல் மது விருந்துகளில் கலந்து கொள்ள மாட்டேன் என பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.

நடிகர் அனில்கபூரின் மகள்தான் சோனம் கபூர். ராஞ்ஜனா இந்தி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

Liquor party: Sonam Kapur's new decision

இந்தி நடிகைகள் பலர் நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் மது விருந்துகளில் பங்கேற்பது பாலிவுட்டில் சகஜம்.

அந்த வகையில் சோனம் கபூர் எப்படி... மதுவிருந்து கொண்டாட்டங்களில் பங்கேற்பாரா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த சோனம் கபூர், "நான் மதுபானங்களைத் தொட்டதே இல்லை. ஏதாவது விருந்துகளில் தவிர்க்க முடியாத சூழலில் பங்கேற்பேன். ஆனால் மதுவைத் தொட மாட்டேன். இனி எந்த வகையிலும் மது விருந்துகளில் கலந்து கொள்வது இல்லை. அவற்றைப் புறக்கணிப்பேன்," என்றார்.

அது ஏன் உங்களுக்கு இவ்வளவு பாதுகாப்பு? என்று கேட்டபோது, "சினிமாவில் அறிமுகமானதில் இருந்து அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். என் சொந்த வாழ்க்கை பற்றிய எல்லா விஷயங்களும் அவர்களுக்குத் தெரியும். பாதுகாவலர்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது. எனது தேவைகளை அவர்கள் கவனித்துக்கொள்கிறார்கள். மற்றவர்கள் என்னிடம் நெருங்காமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

பிரபலங்கள் எது செய்தாலும் விளம்பரமாகி விடுகிறது. இந்த நிலையில் பாதுகாவலர்கள் என்னை சுற்றி இருப்பது அவசியம். அவர்கள் எனது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான விஷயங்கள் வெளியே போகாமல் பார்த்துக்கொள்கிறார்கள்," என்றார்.

English summary
Actress Sonam Kapoor says that she never attended liquor parties anymore.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil