Don't Miss!
- News ஆ.ராசா VS எல்.முருகன்.. திமுக நம்பிக்கை, பாஜக எழுச்சி! நீலகிரி தொகுதியில் என்ன நடக்கிறது தெரியுமா?
- Sports KKR vs RR : ஐபிஎல் தொடரிலேயே 2வது மோசமான பந்துவீச்சு.. அஸ்வின் கேரியரையே காலி செய்த சுனில் நரைன்
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
“பஞ்சத்துல சிக்குன மாதிரி இருக்கீங்களே”.. பிரபல நடிகையின் புதிய போட்டோவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்
நடிகை லிசா ஹேடனின் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
டெல்லி: நடிகை லிசா ஹேடன் ஒரு போட்டோ இன்ஸ்டாகிராமில் போட்டு, நெட்டிசன்களிடம் செமையாக வாங்கிக்கட்டிக் கொண்டு இருக்கிறார்.
ஆயிஷா படம் மூலம் இந்தியில் அறிமுகமானவர் நடிகை லிசா ஹேடன். குயின், ஹவுஸ்புல் 3, ராஸ்கல்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தொழிலதிபர் டினோ லால்வாணி என்பவரை திருமணம் செய்த கொண்ட லிசாவுக்கு, ஜாக் எனும் மகன் இருக்கிறான். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தலைகாட்டி வருகிறார் லிசா.
|
கருப்புநிற உடை:
இந்நிலையில் ஒரு செல்போன் விளம்பர நிகழ்ச்சியில் லிசா சமீபத்தில் கலநதுகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். கருப்பு நிற குட்டைப்பாவாடை ரக உடையில் இருக்கும் அந்த போட்டோவை வைத்து தான் நெட்டிசன்கள் லிசாவை அசிங்கப்படுத்தி வருகின்றனர்.
ஒல்லியான தேகம்:
இயல்பாகவே ஒல்லியான தேகம் கொண்ட லிசாவின் கால்கள், அந்த புகைப்படத்தில் மேலும் ஒல்லியாக தெரிகின்றன. இதை பார்த்த அவரது பலோயர்கள், "ஏதாவது சாப்பிடக்கூடாதா லிசா. பஞ்சத்தில் அடிப்பட்டவர் போல இருக்கீங்களே", என கமெண்ட் செய்துள்ளனர். மேலும் சிலர், இவ்வளவு ஒல்லியான உருவத்தை நாங்கள் பார்த்ததே இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.
ஆதரவு விமர்சனம்:
ஆனால் லிசாவுக்கு ஆதரவாக ஒரு குரலும் ஒலித்துள்ளது. "உடலை வைத்து ஒருவரை அசிங்கப்படுத்தக் கூடாது. குறிப்பாக பெண்களின் உடல்வாகு, ஹார்மோன் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு விதமாக மாறும். ஒரு பெண் ஒல்லியாக இருந்தாலும், குண்டாக இருந்தாலும், அவள் எப்போதுமே அழகு தான்", என ஒருவர் தெரிவித்துள்ளார்.
குவியும் லைக்ஸ்:
லிசா ஹேடனின் ஒல்லியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதேசமயம் ஒரு பெண்ணை தேகத்தை வைத்து அசிங்கப்படுத்தக் கூடாது என்ற வாதமும் வலுத்து வருகிறது. லிசாவின் இந்தப் புகைப்படத்தை மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.