»   »  20 வருடமாக என் உதட்டில் "கை"யே வைச்சதில்லை.. சொல்கிறார் லிசா ரே

20 வருடமாக என் உதட்டில் "கை"யே வைச்சதில்லை.. சொல்கிறார் லிசா ரே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை லிசா ரே ஒரு காலத்தில் பாலிவுட்டைக் கலக்கிய நடிகை. இப்போதும் அப்போது போலவே கவர்ச்சிகரமாக காணப்படும் லிசா ரேவை அடையாளம் காட்டுவது அவரது அழகான இதழ்கள்தான். ஆனால் அதில் எந்த செயற்கையும் கிடையாது என்றும் அதில்தான் இதுவரை எந்தவிதமான செயற்கை அழகையும் சேர்க்கவில்லை என்றும் கூறுகிறார் லிசா ரே.

கசூர், வாட்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார் லிசா ரே. தமிழிலும் கூட சரத்குமாருடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த படம் ராம்கோபால் வர்மாவின் வீரப்பன்.

இந்த நிலையில் லிசா ரே தனது இதழை மேலும் அழகாக்க அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதை மறுத்துள்ளார் லிசா ரே.

நோ ஆபரேஷன்...

நோ ஆபரேஷன்...

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், ‘நான் எனது உதட்டில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ளதாக சிலர் கூறுகிறார்கள். அதுபோல நான் ஒரு போதும் செய்ததில்லை.

புகைப்படங்களே சாட்சி...

20 வருடமாக எனது உதட்டில் நான் கை வைத்ததே இல்லை. புகைப்படங்களைப் பார்த்தாலே தெரியுமே' என்று கூறியுள்ளர் லிசா ரே.

ரத்த புற்றுநோய்...

ரத்த புற்றுநோய்...

அழகுக்குள்தான் ஆயிரம் பிரச்சினை இருக்கும் என்பார்கள். அதேபோல அழகோவியமாக வலம் லிசா ரேவுக்கு 2009ம் ஆண்டு ரத்த புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டு அதிலிருந்து மீண்டு வந்தார்.

வீரப்பன்...

வீரப்பன்...

கடந்த 2015ம் ஆண்டு இஷ்க் பார்எவர் படத்தில் ஜாவேத் ஜாப்ரியுடன் இணைந்து நடித்தார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான படம் வீரப்பன் ஆகும்.

English summary
She made her comeback in the Bollywood film “Ishq Forever” in 2015 after a gap of 13 years. Actress Lisa Ray, who has been rumored to have gotten a lip job, took to Twitter June 8 to clear the air.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil