»   »  லக்ஸி - பேக் டூ பெவிலியன்!

லக்ஸி - பேக் டூ பெவிலியன்!

Subscribe to Oneindia Tamil
கோலிவுட்டிலிருந்து டோலிவுட், மல்லுவுட் என ஒரு சுற்றி சுற்றிவிட்ட லக்ஸி என்ற சுருதி ராஜ் மீண்டும் தமிழுக்கே திரும்பி விட்டார்.

பெயரையே செக்ஸியாக வைத்துக் கொண்டு படு குஜாலாக கவர்ச்சி காட்டி நடிக்க வந்தவர் தான் லக்ஸி. ஆனால் அவருக்கு லக் இல்லையோ அல்லதுரசிகர்களுக்கு ரசனை சரியில்லையோ தமிழில் சரியானபடி வாய்ப்புகள் வரவில்லை.

சுருதி ராஜ் என்று பெயர் மாற்றிக் கொண்டு பிரசன்னாவுடன் இவர் நடித்த காதல் டாட் காம், பூம் ஆகிவிட்டது.

கடுப்பாகிப் போன இவர் மீண்டும் லக்ஸி என்ற பெயருக்கே தாவி, மூட்டை முடிச்சுகளுடன் தெலுங்குக்குப் போனார். கட்டுமஸ்தான பாடி டான்ஸ்களால்சலிப்படைந்து போன மணவாடுகளுக்கு லக்ஸியின் மென்மை கலந்த கவர்ச்சி இதமாக அமைந்ததால், வரவேற்பு கொடுத்தனர்.

ஆனால், அது நெடு நாட்கள் நீடிக்கவில்லை. இதனால் தனது சொந்த ஊரான கேரளாவுக்குப் போனார். லக்ஸிக்கு என்ன கஷ்டமோ, அங்கு நல்லபடங்களில் நடிக்காமல், சில அந்த மாதிரியான படங்களில் தலை காட்டினார்.

அந்த வாய்ப்புக்களும் தேய்ந்து போய்விட, கொஞ்ச நாள் வூட்டோடவே கிடந்தார்.

ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமோ? எனவே மறுபடியும் தமிழுக்கே திரும்பி வந்துள்ளார்.

பெயரை மீண்டும் ஸ்ருதி ராஜ் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.

கோலிவுட்டின் துணைத் தலைநகரமான சாலிகிராமத்தில் குடிபுகுந்துள்ள லக்ஸி, துணைக்கு தந்தையை வைத்துக் கொண்டு வாய்ப்புகளை வலை வீசித் தேடிவருகிறார்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், வந்து போனவர்களையும் வாழ வைக்கும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil