»   »  அம்மா வேடத்தில் பூமிகா... எம்எஸ் டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி!

அம்மா வேடத்தில் பூமிகா... எம்எஸ் டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: 37 வயதான நடிகை பூமிகா சாவ்லா மகேந்திர சிங் டோணியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், டோணிக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்.

விஜய் நடிப்பில் வெளியான 'பத்ரி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூமிகா சாவ்லா. தொடர்ந்து 'ரோஜாக்கூட்டம்', 'சில்லுன்னு ஒரு காதல்' போன்ற படங்கள் இவர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றன.

தமிழில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் ஒக்கடு, சிம்ஹத்ரி, குஷி போன்ற வெற்றிப் படங்களினால் தெலுங்கின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

M.S. Dhoni is my comeback film says Bhumika Chawla

திருமணத்திற்குப் பின் இவரின் மார்க்கெட் சரிந்து விட்டது. இதனால் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் குணச்சித்திர நடிகையாக பூமிகா நடித்து வருகிறார்.

தற்போது கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில்(M.S. Dhoni: The Untold Story), டோணியின் அம்மாவாக பூமிகா நடித்திருக்கிறார். இதுகுறித்து அவர், ''இப்படம் எனக்கு நல்ல திருப்புமுனைப் படமாக அமையும்,'' என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

டோணியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தை நீரஜ் பாண்டே இயக்கி வருகிறார். இதில் டோணியாக சுஷாந்த் சிங் ராஜ்புத்தும், விராட் கோலியாக பவத் கானும், ஜாகீர் கானாக கவுதம் குலாட்டியும் நடித்துள்ளனர்.

இது தவிர சுரேஷ் ரெய்னா வேடத்தில் ராம் சரணும், டோணியின் நண்பராக ஜான் ஆப்ரகாமும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

English summary
Bhoomika Chawla will play Dhoni’s mother roles. M.S. Dhoni : The Untold Story is an upcoming Bollywood biographical film directed by Neeraj Pandey. The film is based on the life of Indian cricketer Mahendra Singh Dhoni. The film features Sushant Singh Rajput in the leading role as Dhoni.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil