»   »  மீண்டும் மாளவிகா, எஸ்.ஜே. சூர்யா

மீண்டும் மாளவிகா, எஸ்.ஜே. சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

எஸ்.ஜே.சூர்யாவுடன் மீண்டும் இணைகிறார் மதமத மாளவிகா. இம்முறை இருவரும் இணையப் போவது தெலுங்குப் படத்துக்காக.

வியாபாரி மற்றும் திருமகனில் சூர்யாவுடன் இணைந்து திறமை காட்டியவர் மாளவிகா. கல்யாணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு சூர்யா மீது சரமாரியாக புகார் கூறினார் மாளவிகா.

திருமகன் ஷூட்டிங்கின்போது சூர்யா தன்னிடம் அத்துமீறி நடக்க முயன்றார் சூர்யா என்று மாளவிகா கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டூயட் பாடலை படமாக்கியபோது தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார் சூர்யா, தன்னை தேவையில்லாமல் பல இடங்களில் தொட்டார் என்று கடுப்பாக கூறினார் மாளவிகா.

ஆனால் இத்தனை குமுறலுக்குப் பின்னர் டிவி ஒன்றின் டாக் ஷோவில் சூர்யாவுடன் இணைந்து காட்சி தந்து அதிர்ச்சியையும் கொடுத்தார் மாளவிகா.

அந்த டாக் ஷோவின்போது தான் சூர்யா குறித்து அவதூறாகக் கூறவில்லை. அவர் ஒரு பக்கா ஜென்டில்மேன் என்று பக்காவாக பல்டி அடித்தார்.

இதனால் மாளவிகாவின் முந்தைய பேட்டியை வாங்கி தனது பத்திரிகைக்கு கொடுத்த செய்தியாளர் அப்செட்டாகிப் போனார்.

இந்த நிலையில், எஸ்.ஜே.சூர்யாவுடன் மீண்டும் இணைகிறார் மாளவிகா. தெலுங்கில் எஸ்.ஜே.சூர்யா இயக்கும் புலி படத்தில்தான் மாளவிகா நடிக்கிறார். பவன் கல்யாண் இப்படத்தின் நாயகனாக வருகிறார். எஸ்.ஜே. சூர்யா இயக்குகிறார்.

தமிழிலில் விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்து பின்னர் டிராப் ஆகிப் போன படம்தான் புலி. இப்போது அது தெலுங்கில் உருவாகப் போகிறது.

முதலில் சரமாரியாகப் புகார் கொடுத்து விட்டு இப்போது மீண்டும் சூர்யாவுடன் இணையவுள்ள மாளவிகாவைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

திருமகன் படப்பிடிப்பின்போதே சூர்யாவுக்கும், மாளவிகாவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஆகிப் போய் இருவரும் நெருக்கமானது அனைவருக்கும் தெரிந்த ஹிஸ்டரி. இந்த நிலையில் மூன்றாவதாக இருவரும் இணைந்து பணியாற்றவுள்ளதை கோலிவுட் குசும்பர்கள் மர்மப் புன்னகையுடன் சுட்டிக் காட்டுகிறார்கள்.

என்னமோ இருக்குதுப்போய்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil