»   »  நீத்துவின் ஹாரர்!

நீத்துவின் ஹாரர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images

பிச்சைக்காரி கேரக்டருக்குப் பொருத்தமில்லை என்று கூறி பாலாவால் நிராகரிக்கப்பட்ட பாலிவுட் புயல் நீத்து சந்திரா இப்போது மாதவன் மூலம் தமிழுக்கு என்ட்ரி ஆகிறார்.

பாலிவுட் குளத்தில் ஏகப்பட்ட புதுமுகங்கள் நீந்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அழகு மீன்களில் ஒருவர்தான் நீத்து சந்திரா. டிராபிக் சிக்னல், கரம் மசாலா உள்ளிட்ட படங்களில் திறமை காட்டியுள்ளார். டிராபிக் சிக்னல் படத்தில் பிச்சைக்காரி கேரக்டரில் கலக்கியிருந்தார்.

இதைக் கேள்விப்பட்டுத்தான் தனது நான் கடவுள் படத்தில் பிச்சைக்கார நாயகியின் கேரக்டருக்கு இவர் பொருத்தமாக இருப்பாரா என்பதை அறிய தேனிக்கு வரவழைத்தார் பாலா.

அடடா, தமிழ்ப் பட வாய்ப்பு, அதிலும் பாலாவின் படமாச்சே என்று நீத்துவும் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து அங்கிருந்து மதுரைக்குப் பறந்து, மதுரையிலிருந்து காரில் தேனிக்கு ஓடினார்.

ஆனால் நீத்துவைப் பார்த்த மாத்திரத்திலேயே அதிருப்தியாகி விட்டாராம் பாலா. காரணம், நீத்துவின் வடக்கத்தி முகச் சாயல். இதனால் ஏமாற்றத்துடன் மும்பைக்குப் பேக்கப் ஆனார் நீத்து.

ஆனால் இப்போது சாக்லேட் பாய் மாதவனுடன் ஜோடி போடும் வாய்ப்பு நீத்துவைத் தேடி ஓடி வந்துள்ளது.

மாதவனுக்கு சோதனை என்றால் ரொம்பப் பிடிக்கும். அதாவது பரீட்சார்த்த முயற்சிகளில் ஆர்வம் கொண்டவர். ரொமான்ஸ் மட்டுமே பண்ணத் தெரியும் என்று அவரைப் பற்றி பலரும் கூறிய போது சடாரென மின்னலே மூலம் அதிரடி நாயகனாகவும் மாறினார். ரன் படத்தில் தனது முரட்டுத்தனமான நடிப்பை வெளிக் காட்டினார்.

இப்போது ஒரு ஹாரர் படத்தில் நடிக்கவுள்ளார் மாதவன். படத்தின் பெயர் யாவரும் நலம். இதில்தான் நீத்து, மாதவனுடன் ஜோடி போடுகிறார்.

சிம்புவை வைத்து அலை என்ற படத்தை இயக்கிய விக்ரம்தான் யாவரும் நலம் படத்தையும் இயக்கப் போகிறார். நவம்பர் 15ம் தேதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

முதலில் இப்படத்தில் தர்மேந்திராவின் மகள் இஷா தியோல் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரை விட்டு விட்டு நீத்துவைப் பிடித்துள்ளனர்.

பாலிவுட்டைக் கலக்கி வரும் சங்கர் -ஈசான் - லாய் இசையமைக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருளிலும் தனது கேமராவை அழகாக பேச வைக்கும் பி.சி.ஸ்ரீராம் கேமராவைக் கையாளுகிறார்.

யாவரும் நலம் குறித்து விக்ரம் கூறுகையில், படம் பக்கா திரில்லராக இருக்கும். கோலிவுட்டை ஒரு திரில்லர் படம் பயமுறுத்தி ரொம்ப நாட்களாகிறது. இந்தப் படம் அந்தக் குறையைத் தீர்க்கும். அனைத்துத் தரப்பினரும் பார்த்து ரசிக்கும், வகையில் நிச்சயம் இப்படம் இருக்கும் என்றார்.

படத்தைப் பார்த்த பிறகும் அனைவரும் பயப்படாமல் நலமாக இருந்தால் சரித்தான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil