»   »  சத்யராஜ் ஜோடியான ரோஜா பட நாயகி மதுபாலா

சத்யராஜ் ஜோடியான ரோஜா பட நாயகி மதுபாலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சத்யராஜ் ஜோடியாக நடிக்கிறார் ரோஜா பட நாயகி மதுபாலா, படத்தின் பெயர் மஹாநட்சத்திரம். இந்தப்படத்தை பவன் குமார் என்பவர் தயாரித்து நாயகனாக நடிக்கவுள்ளார். புதுமுக இயக்குநர் பரத் மார்டின் இந்தப் படத்தை இயக்கும் இந்தப்படம் தெலுங்கிலும் தயாராகிறது. ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு துவங்குகிறது.

அழகன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மதுபாலா. தமிழ் தெலுங்கு மலையாளம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் 'ரோஜா', 'ஜென்டில்மேன்' படங்கள் மூலம் மதுபாலாவிற்கு பிரேக் கிடைத்தது. வானமே எல்லை, பாஞ்சாலங்குறிச்சி, செந்தமிழ் செல்வம் உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகியாக நடித்தார் மதுபாலா.

சினிமாவில் பிஸியாக இருந்த போதே ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன மதுபாலா இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர் மீண்டும் 'வாயை மூடி பேசவும்' படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

சத்யராஜ் - மதுபாலா

சத்யராஜ் - மதுபாலா

சின்ன இடைவெளிக்குப் பிறகு தற்போது 'மஹா நட்சத்திரம்' என்ற படத்தில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் சத்யராஜ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் மதுபாலா.

வெற்றி இயக்குநர்கள்

வெற்றி இயக்குநர்கள்

மஹா நட்சத்திரம் படத்தில் நடிப்பது பற்றி கருத்து கூறியுள்ள மதுபாலா, நான் நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே பிரபலமானவர்களின் படத்தில் தான் தோன்றியுள்ளேன். நான் எப்போதுமே வெற்றிபெற்ற இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதையே விரும்புவேன் என்று தெரிவித்துள்ளார்.

சம்மதிக்க வைத்த கதை

சம்மதிக்க வைத்த கதை

இந்த முறை புதிய அணியுடன் நடிக்கவுள்ளேன். ஏனென்றால் அந்தக் கதை என்னை வெகுவாக ஈர்த்துவிட்டது. தயாரிப்பு, நாயகன் என எல்லாவற்றையும் விட, இந்த பாத்திரப்படைப்புதான் என்னை சம்மதிக்க வைத்தது என்று கூறியுள்ளார் மதுபாலா.

திருப்புமுனையைத் தரும்

திருப்புமுனையைத் தரும்

துணிந்து ஒரு வாய்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன், சிறப்பாக அமையும் என நம்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இது எனது திரையுலக வாழ்க்கையில் மற்றொரு கதாபாத்திரமாக இல்லாமல், இது வலிமையானதாக இருக்கும் என்றும் மதுபாலா கூறியுள்ளார்.

English summary
Actress Madhoo, who was last seen in films such as “Ranna” and “Vaaya Moodi Pesavum”, has signed a new Tamil project titled “Maha Natchathiram”, which also features veteran actor Sathyaraj in an important role.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil