»   »  ஜில் ஜில் மதுமிதா

ஜில் ஜில் மதுமிதா

Subscribe to Oneindia Tamil
"குடைக்குள் மழை நாயகி மதுமிதாவுக்கு புதுப்பட வாய்ப்புகள் நிறைய வந்து கதவைத் தட்டுவதால் சம்பளத்தை ஒரேயடியாகஉயர்த்தி விட்டாராம். ஒரு படத்திற்கு இவர் 12 லட்ச ரூபாய் கேட்கிறாராம்.

பார்த்திபனின் "குடைக்குள் மழையில் பார்த்திபனின் நடிப்பை விட, அதிகம் பேசப்பட்டவர் மதுமிதா தான்.

அபரிமிதமான வனப்புடன் இருக்கும் மதுமிதா தமிழில் முதல் படத்தை முடித்துவிட்டு சொந்த ஊர் தெலுங்கில் ஒரு ரவுண்டைமுடித்துவிட்டார். இப்போது மீண்டும் தமிழை நோக்கி...

இப்போது "இ 3- இளமை இதோ இதோ", "அமுதே, "உன்னோடு ஒரு நாள்", இங்லீஸ்காரன் உட்பட பல படங்களில் நடித்துவருகிறார். தெலுங்கிலும் 3 படங்கள் கைகளில். இப்படி தயாரிப்பாளர்கள் வரிசையாக வந்து கதவைத் தட்டுவதால் சந்தடி சாக்கில்தனது ரேட்டையும் மள மள வென உயர்த்தி இருக்கிறார்.

ஒரு படத்திற்கு 12 லட்சம் கேட்கும் மதுமிதாவைப் பார்த்து வாயைப் பிளக்கிறாார்கள் தயாரிப்பாளர்கள்.

இவர் நடிக்கும் "இ 3 இளமை இதோ இதோ படத்தை இயக்குபவர் புதுமுக இயக்குனர் தினேஷ் செல்வராஜ். இவர்மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்தவர். இதில் ஈஸ்வர், வினோத் ராஜ், அனூப் குமார் ஆகிய 3 புதுமுகங்கள்கதாநாயகர்களாக அறிமுகமாகின்றனர்.

அழகிய தமிழில் "அமுதே என்று பெயர் வைத்து அதற்கு மதுமிதாவை ஹீரோயினாக்கியிருப்பவர் இயக்குனர் எழில்இயக்குகிறார். அஜித்தின் "ராஜா படத்திற்கு பின் நீண்ட இடைவெளிக்கு கொடுத்து மீண்டும் இயக்க வந்துள்ளார் எழில்.

மெல்லியதாய் காதல் சொல்லும் இளமை கொப்பளிக்கும் படமாம் இது.

ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இதன் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் வேகமாக நடந்து வருகிறது.

இந்தப் படம் தவிர பாசில் இயக்கத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்திலும் மதுமிதா திறமையைக் காட்டி வருகிறார்.

இங்கிலீஷ்காரன் படத்தில் சத்யராஜூக்கு இரண்டு ஜோடிகளில் ஒருவராக மதுமிதா நடிக்கிறார். இன்னொருவர் யார் தெரியுமோ..நமிதா தான்..

இதில் நமிதாவுக்கும் மதுமிதாவுக்கும் இடையே உடை களைப்பு போட்டி அபாரமாய் நடந்து கொண்டிருக்கிறது.

மதுமிதாவை பேசவிட்டால் மட மடவென வார்த்தைகள் வந்து விழுகின்றன.

""எங்க வீட்டிலேயே எங்க அக்காதான் ரொம்ப அழகு. அவள் மட்டும் நடிக்க வந்திருந்தால் எனக்கெல்லாம் வாய்ப்பேகிடைத்திருக்காது. ஆனால் நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் நடிக்க வந்து விட்டேன். அக்காவுக்குகல்யாணமாகி செட்டிலாகி விட்டாள் ( ஜஸ்ட் மிஸ்!)

எனக்கு நல்லா டான்ஸ் ஆட வரும். அதுவும் பாரம்பரிய பரத நாட்டியம் என்றால் எனக்கு உயிர். சினிமா டான்ஸும் இப்போகத்துக்கிட்டேன்.

என் தாய்மொழி தெலுங்கு. குடைக்குள் மழை படப்பிடிப்பின்போது எல்லோருடனும் தமிழில்தான் பேச வேண்டும் என்றுபார்த்திபன் சார் சொன்னதால் தமிழ் கற்க ஆரம்பித்தேன். இப்போ ரொம்ப நல்லாவே தமிழ் பேச ஆரம்பித்து விட்டேன் என்றார்.

மதுமிதாவிடம் பேசும்போது ஜில் என்றிருந்தது..

குடைக்குள் மழை.. மாதிரி

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil