»   »  நல்வரவு மதுமிதா!

நல்வரவு மதுமிதா!

Subscribe to Oneindia Tamil

காணாமல் போய் விட்ட மதுமிதா மறுபடியும் நல்வரவு மூலம் கோலிவுட்டில் கொடி நாட்ட வருகிறார்.

சி௠ார்த்திபனின் சீரிய கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவர் மதுமிதா. தேனில் முக்கிய பலாச்சுளை போல பதமாகவும், இதமாகவும் இருக்கும் மதுமிதா, குடைக்குள் மழை மூலம் நடிக்க வந்த ஆந்திர தேசத்து அழகு நிலா.

நல்ல முகம், வளமையான அழகு, சிறப்பான நடிப்பு என திறமைகள் கொட்டிக் கிடந்தாலும் குடைக்குள் மழைக்குப் பிறகு இங்கிலீஷ்காரன், நாளை என இரு படங்களோடு முடங்கிப் போய் விட்டார் மதுமிதா.

கோலிவுட்டின் அட்ஜஸ்ட் பாலிசிக்கு அவரால் தாக்குப் பிடித்து ஒத்துழைக்க முடியவில்லை என்பதால்தான் இந்த தேக்க நிலை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் புதிதாக ஒரு படத்தில் புக் ஆகியுள்ளார் மதுமிதா. நல்வரவு என்று பெயரிட்டுள்ளனர். கிளாசிக் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் வேணு என்கிற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் மதுமிதா.

வித்தியாசமான ரோலில், ரகுவரன் கலக்கவுள்ளார். ராதாரவி, தலைவாசல் விஜய் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். பாலசூர்யா என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளார்.

ஒரு படமும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பெயர் சொல்லும்படியான கேரக்டரில், படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று விடாப்படியாக இருக்கிறார் மதுமிதா. அதனால்தான் ஒவ்வொரு படத்திற்கும் இடையில் போதிய இடைவெளி விழுவது குறித்து அவருக்குக் கவலை இல்லையாம்.

இப்போது கிடைத்துள்ள நல்வரவு படத்திலும் கூட மதுமிதாவுக்கு அருமையான வேடமாம். நடிக்க நல்ல வாய்ப்பு என்பதால்தான் புதுமுகத்திற்கு ஜோடி என்று கவலைப்படாமல் ஒத்துக் கொண்டாராம்.

குடைக்குள் மழை, அடை மழையாவது எப்போதோ?

Please Wait while comments are loading...