»   »  மறக்காத மதுமிதா

மறக்காத மதுமிதா

Subscribe to Oneindia Tamil

தயாரிப்பாளரே மறந்து போய் விட்ட ஒரு படத்தைப் பற்றி அந்தப் படத்தில் நாயகியாக புக் ஆன மதுமிதா மறக்காமல் எல்லோரிடமும் பேசி வருகிறார். ஆனால் படம்தான் வளருகிற வழியைக் காணோம்.

குடைக்குள் மழை மூலம் தமிழுக்கு வந்த சந்தனப் பெண் மதுமிதா. வாசம் வீசி மலருவார் என எதிர்பார்க்கப்பட்ட மதுமிதா, முதல் படத்தோடு முக்காடு போட்டுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து நல்ல பட வாய்ப்புகள் வராததால் முடங்கிக் கிடந்தார் மதுமிதா. இடையில் வந்த நாளை அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனாலும் சரிந்து போன மார்க்கெட்டை தூக்கி நிறுத்த அது உதவவில்லை.

எங்கும் காணப்படாதோர் பட்டியலில் இணைந்துள்ள மதுமிதாவை நாயகியாகப் போட்டு ஷக்தி சிதம்பரம் புதிய படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. படத்துக்கு பட்டாசு என்றும் பெயர் வைத்தார்.

பெயர் வைத்தார், ஹீரோயினை புக் செய்தார். அத்தோடு பட்டாசு பதத்துப் போய் நின்று விட்டது. படத்தை மறந்து போய் விட்டார் ஷக்தி சிதம்பரம்.

ஆனால் மதுமிதா மட்டும் மறக்கவே இல்லை. தொடர்ந்து பட்டாசு படம் குறித்து பலரிடமும் கூறி வருகிறார். பட்டாசு வந்தால் எனது நிலையே வேறு என்றும் பெருமையாக கூறி வருகிறார்.

இருந்தாலும் பட்டாசு வெடிக்கும் வழியைக் காணாததால் ஹைரதாபாத்திலேயே தொடர்ந்து குடியிருந்து வருகிறார் மதுமிதா. அத்தோடு அங்குள்ள தெலுங்குப் படத் தயாரிப்பாளர்களை நேரில் பார்த்தும் செல்பேசியில் செல்லமாக கெஞ்சியும் பட வாய்ப்பு கேட்டு வருகிறாராம். ஆனாலும் இதுவரை ஒன்றும் குதிரவில்லை.

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் வரும், வரும் என்று நம்பிக் கொண்டிருப்பாய், பேசாமல் கல்யாணத்தையாவது பண்ணிக் கொள்ளேன் என்று அவரது வீட்டில் அணத்த ஆரம்பித்து விட்டார்களாம்.

வாட் நெக்ஸ்ட் மது?

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil