»   »  புத்தன் இயேசு காந்தி.... திரும்ப வந்தார் காணாமல் போன மதுமிதா!

புத்தன் இயேசு காந்தி.... திரும்ப வந்தார் காணாமல் போன மதுமிதா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

குடைக்குள் மழை மதுமிதாவை நினைவிருக்கிறதா... அதன் பிறகு ஓஹோ புரொடக்ஷனிலிருந்து உப்புமா புரொடக்ஷன் படம் வரை பண்ணிப் பார்த்தார். ஒன்றும் கைகொடுக்கவில்லை.

இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் புத்தன் இயேசு காந்தி படம் மூலம்.

ப்ளசிங் என்டர்டெயினர்ஸ் தயாரிக்கும் இப் படத்தில் கிஷோர், வசுந்தரா, அசோக், மதுமிதா, கயல் வின்சென்ட் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

கிஷோர் தூக்குத் தண்டனை கைதியாக நடிக்கிறார். வசுந்தராவும், அசோக்கும் பத்திரிகையாளர்களாக வருகிறார்கள். மதுமிதா சமூக அவலங்களுக்கு எதிராக போராடும் ஆக்டிவிஸ்ட் கேரக்டரில் நடிக்கிறார்.

Madhumitha's come back movie Budhdhan Yesu Gandhi

இந்த கேரக்டருக்காக, மதுமிதா புக்கர் விருது பெற்ற அருந்ததி ராயை ரோல் மாடலாக ஏற்று அவரின் நடை, உடை பாவனைகளை உள்வாங்கி நடிக்கிறார். இதற்காக அருந்ததி ராய் பங்கேற்ற நிகழ்ச்சி வீடியோக்களைப் பார்த்து அந்தக் கேரக்டருக்குத் தன்னை தயார்ப்படுத்தி வருகிறார்.

அண்மையில் தொலைக்காட்சி சேனலில் நடக்கும் விவாத நிகழ்ச்சியில் மதுமிதா மற்றும் கிஷோர் பங்கேற்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசி நடிக்கும் காட்சியில் மதுமிதா, க்ளிசரின் போடாமல் உண்மையாகவே அழுது நடித்தார்.

Madhumitha's come back movie Budhdhan Yesu Gandhi

அவர் அழுது கொண்டே வசனம் பேசியது, அங்கிருந்த படப்பிடிப்புக்குக் குழுவினரை உருக வைத்து விட்டது. அந்தக் காட்சி முடிந்ததும் எல்லோரும் கைத்தட்டி மதுமிதாவைப் பாராட்டினார்கள். சமீபத்தில் வெளியான அழகு குட்டி செல்லம் படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இந்தப் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார். வேத் சங்கர் இசையமைக்கிறார். ஆள் மற்றும் மெட்ரோ படங்களின் படத்தொகுப்பாளர் ரமேஷ் பாரதி எடிட்டிங் செய்கிறார்.

Madhumitha's come back movie Budhdhan Yesu Gandhi

அறிமுக இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர் இயக்குகிறார். பிரபாதீஷ் சாமுவேல், கபிலன் சிவபாதம் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

English summary
Kudaikkul Mazhai fame Madhumitha is make her come back in Budhan Yesu Gandhi movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil