»   »  மதுமிதாவின் புது அனுபவம்

மதுமிதாவின் புது அனுபவம்

Subscribe to Oneindia Tamil
Madhumitha
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் தலை காட்டும் மதுமிதா, இயக்குநர் அமீருக்கு ஜோடியாக யோகி படத்தில் நடித்து வருவது புதுவித அனுபவமாக இருப்பதாக புளகாங்கிதத்தோடு கூறுகிறார்.

குடைக்குள் மழை மூலம் தமிழுக்கு வந்த மதுமிதா, ஓவர் கிளாமருக்கு ரெட் போட்டதால் பட வாய்ப்புகள் அதிகம் வராமல் அவதிப்பட்டு வருகிறார்.

நாளை படத்தில் அவருக்கு நல்ல கேரக்டர் கிடைத்தது. பேசவும் பட்டார். ஆனாலும், காட்சிக்குத் தேவையான கிளாமர் காட்டத் தயங்காத மதுமிதா, அதற்கு மேல் காட்ட வேண்டுமானால் என்னால் முடியாது என்ற கொள்கையில் திட்டவட்டமாக இருக்கிறார். இதன் காரணமாக அவ்வப்போது ஏதாவது படத்தில் தலை காட்டிக் கொண்டிருக்கும் மதுமிதா கையில் இப்போது முக்கியமான இரு படங்கள் உள்ளன.

அமீர் நடிகராக அறிமுகமாகும் யோகி படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் மதுமிதா. இந்தப் படத்தில் தனக்கு அருமையான கேரக்டர் என்று சந்தோஷப்படும் மதுமிதா, அமீருடன் இணைந்து நடிப்பது அதை விட சுவாரஸ்யமாக இருப்பதாக கூறுகிறார்.

தான் இயக்கிய படங்களில் நடித்தவர்களையெல்லாம் சூப்பர் ஹிட் ஆக்கிய ஒரு இயக்குநருக்கு ஜோடியாக நடிப்பது சாதாரண விஷயமா. அதிலும் அமீர் சார் போன்ற கிரேட் படைப்பாளியுடன் இணைந்து நடிப்பது பாடம் கற்பது போல படு சுவாரஸ்யமாக இருப்பதாகவும், இது ஒரு புது அனுபவம் எனறும் சந்தோஷத்தோடு கூறுகிறார்.

இந்தப் படம் தவிர அறை எண் 305ல் கடவுள் படத்திலும் மதுமிதா நடிக்கிறார். இந்தப் படத்திலும் தனக்கு நல்ல ரோல் என்கிறார்.

இதுதவிர நல்வரவு என்ற படமும் மதுமிதா கைவசம் உள்ளதாம். இந்தப் படங்கள் வெளிவந்தால் எனக்கு தமிழ் திரையுலகில் நிச்சயம் நல்ல இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மூன்று படங்களிலும் மும்முரமாக நடித்து வருகிறாராம் மதுமிதா.

குடைக்கு வெளியேயும் மழை பெய்ய வாழ்த்துக்கள்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil