»   »  மேக்கப் மேன் என் கையை முறுக்கி அடித்தார்: மிஷ்கின் பட ஹீரோயின் புகார்

மேக்கப் மேன் என் கையை முறுக்கி அடித்தார்: மிஷ்கின் பட ஹீரோயின் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் மேன் தன்னை தாக்கி அசிங்கமாக பேசியதாக மலையாள நடிகை பிராயாகா மார்டின் தெரிவித்துள்ளார்.

பிசாசு படம் மூலம் ஹீரோயின் ஆனவர் பிரயாகா மார்டின். கேரளாவை சேர்ந்த அவர் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். தற்போது பி.டி. குஞ்சு முகமது இயக்கத்தில் விஸ்வாசபூர்வம் மன்சூர் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம் பற்றி கூறுகையில்,

மேக்கப்

மேக்கப்

படத்தில் நான் இஸ்லாமிய பெண்ணாக நடிக்கிறேன். அதனால் மேக்கப் தேவையில்லை என்றார்கள். சம்பவத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு நான் செட்டுக்கு சென்றேன்.

டல்

டல்

முகம் டல்லாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் தெரிவித்தார். இதையடுத்து மேக்கப் மேனிடம் சென்று டல்லாக மேக்கப் போடுமாறும் அவர் கூறினார்.

கிண்டல்

கிண்டல்

மேக்கப் மேனிடம் சென்றபோது அவர் என்னை கேவலமாக பார்த்ததுடன், அசிங்கமாகவும் பேசினார். படப்பிடிப்பு முக்கியம் என்பதால் அதை கவனிக்காதது போன்று இருந்தேன்.

தாய்

தாய்

படப்பிடிப்பு முடிந்த பிறகு நடந்ததை என் அம்மாவிடம் கூறினேன். அவர் வந்து கேட்டதற்கும் மேக்கப் மேன் கண்டபடி திட்டினார். மரியாதையாக பேசுமாறு நான் விரலை நீட்ட அவர் என்னை கையை முறுக்கி அடித்துவிட்டார். ஆனால் அவர் தனது நண்பரான ஆர்ட் டைரக்டரை வைத்து நான் அவரை தாக்கியதாக ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட வைத்துள்ளார்.

போலீஸ்

போலீஸ்

என்னை தாக்கிய மேக்கப் மேன் மற்றும் பொய்யான ஃபேஸ்புக் போஸ்ட் போட்ட ஆர்ட் டைரக்டர் ஆகியோர் மீது தனித்தனியாக போலீசில் புகார் அளிக்க உள்ளேன் என்றார் பிரயாகா மார்டின்.

English summary
Pisasu fame actress Prayaga Martin said that Viswasapoorvam Mansoor make up hit her and abused her on the sets.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil