For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கட்டுவிரியன் மாளவிகா!

  By Staff
  |

  திருட்டுப் பயலே போட்டுக் கொடுத்த பிளாட்பாரத்தில் கட்டுக்கடங்காத வேகத்தில்போய்க் கொண்டிருக்கும் மாளவிகா, கை நிறையப் படங்களுடன், மனசு நிறையமகிழ்ச்சியுடன் ஜமாய்த்துக் கொண்டிருக்கிறார்.

  பல படங்களில் நாயகியாக நடித்திருந்தும் மாளவிகா பெரிய லெவலில் நடிகையாகமாற முடியவில்லை. ஒரு கட்டத்தில் தமிழில் கதவு மூடப்பட்டது. தடாலெனஇந்திக்குத் தாவி கண்கவர் கவர்ச்சியில் தாளித்து எடுத்தார்.

  அதை வைத்து வந்த வாய்ப்புதான் வாள மீனு. பட்டி தொட்டியெங்கும் பட்டையைக்கிளப்பிய இந்த பாட்டைத் தொடர்ந்து மாளவிகாவைக் குத்துப் பாட்டுக்கு கூப்பிட்டுதயாரிப்பாளர்கள் துரத்த ஆரம்பித்தனர்.

  ஆனால் இனிமேல் நோ குத்து, மொத்தப் படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தால்மட்டுமே கால்ஷீட் என கட் அண்ட் ரைட்டாக சொல்ல ஆரம்பித்தார் மாளவிகா.அப்படிக் கிடைத்ததுதான் திருட்டுப் பயலே.

  இந்தப் படமும் பிச்சுக்கிட்ட ஓட மாளவிகா காட்டில் மாமழை. இப்போது கைநிறையப் படங்களுடன் கல்லாக் கட்டி வருகிறார் மாளவிகா. திருட்டுப்பயலேவுக்குப் பிறகு மீண்டும் ஜீவனுடன் ஜோடி போட்டு நான் அவனில்லை படத்தில்நடிக்கிறார்.

  அந்தக் கால ஜெமினிகணேசன் நடித்த பிளேபாய் டைப் படம்தான் நான் அவனில்லை.அதே கதையை, அதே பெயரில் இப்போது ஜீவனை வைத்து ரீமேக் செய்கிறார்கள்.

  இதில் மாளவிகா தவிர நமீதா, ஜோதிர்மயி உள்ளிட்ட மேலும் நான்குஹீரோயின்களும் உள்ளனர். இதில் நடிப்பதற்காக சென்னையில் முகாமிட்டுள்ளார்மாளு. எப்படி இருக்கிறார் நம்ம ஆளு என்று மாளவிகாவைப் பார்க்கப் போனபோதுமுகமெல்லாம் புசுபுசுவென்று மகிழ்ச்சி தாண்டவமாட உட்கார்ந்திருந்தார் மாளு.

  போனதும், அதுவுமாக ஆக்ரோஷமாக ஆரம்பித்தார் மாளவிகா. என்னைப் போய்கிளாமர் நடிகை என்கிறார்கள். கிளாமர் நடிகை, குடும்பப் பாங்கான நடிகை என்றுவித்தியாசம் பார்ப்பதே தவறு. நடிகைன்னா நடிகை மட்டும்தான்.

  நான் பல படங்களில் நாயகியாக, குடும்பப் பாங்கான ரோல்களில்தான்நடித்துள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் யாரும் சீந்தவில்லை. இப்போது ஒரே ஒருகுத்துப் பாட்டில் ஆடி விட்டேன். உடனே கிளாமர் நடிகை என்று கூறி விட்டார்கள்.ரொம்ப மோசம்பா இது என்று அலுத்துக் கொண்டார்.

  சட்டென கோலாவை உடைத்து கையில் கொடுத்து வேகத்தைத் தணித்து ப்ளீஸ்கண்டினியூ என்றோம். இப்போது கை நிறையப் படங்கள் இருக்கிறது.எஸ்.ஜே.சூர்யாவுடன் வியாபாரி படத்தில் எனக்கு நல்ல ரோல் கொடுத்திருக்கிறார்கள்.

  கிளாமராக மட்டும் இதில் நடிக்கவில்லை, நன்றாக நடித்தும் இருக்கிறேன். எனக்கேற்றவேடம் இது. அதேபோல, எஸ்.ஜே.சூர்யா சாரின் திருமகன் படத்திலும் எனக்கேற்றவேடம்தான்.

  இதுதவிர விஜயகாந்துடன் சபரி, அப்புறம் கட்டுவிரியன் என மேலும் பல படங்களும்கையில் உள்ளன என்று நிறுத்தினார் மாளவிகா.

  நான் அவனில்லை படத்திலும் எனக்கு அருமையான வேடம். அதாவது இதில் பக்காகாமெடி பண்ணுகிறேன். என்னோடு நான்கு ஹீரோயின்கள் இருப்பதால் நீஅவ்ளோதான் என்று எல்லோரும் பயமுறுத்தினார்கள். ஆனால் எனக்கு சுத்தமாகபயமே கிடையாது.

  எத்தனை பேர் உடன் நடித்தாலும், மாளவிகா, மாளவிகாதான், தனித்துத் தெரியக்கூடிய அளவுக்கு திறமை பெற்றவள் நான். ஸோ, நோ பிராப்ளம் என்று படுதெனாவட்டாக கூறுகிறார் மாளவிகா.

  க்யூட் கேர்ள்!

  Read more about: malavika flooded with offers
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X