»   »  சந்திரமுகியில் மாளவிகா

சந்திரமுகியில் மாளவிகா

Subscribe to Oneindia Tamil

நடிக்க வேலை இருக்கிறதோ இல்லையோ வாரந்தோறும் தவறாமல் கோடம்பாக்கத்துக்கு படையெடுத்துவிடுபவர் மாளிவிகா.

தெலுங்கில் அதீத கவர்ச்சி காட்டும் மாளவிகாவை ஹீரோக்கள் மோசமாக நடத்தியதால் கன்னட சினிமா, மும்பை மாடலிங் என்று ஒதுங்கஆரம்பித்திருக்கிறார். அதே போல தமிழில் நடிக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

வாரம் தவறாமல் சென்னைக்கு பறந்து வந்துவிடும் மாளவிகா திரையுலக முக்கியஸ்தர்களை முதலில் போனிலும் அப்புறம் நேரிலும் போய்பார்த்து நெடு நேரம் பேசிவிட்டு வருவார். அப்படியே படத்தில் நடிக்க சான்ஸ் கேட்கிறார்.

இந்த முயற்சிகள் நன்றாகவே பலன் தருகின்றன. இப்படித்தான் பிதாமகனில் கூட இயக்குனர் பாலாவுக்கு சோப்பு போட்டு வாய்ப்பைப்பிடித்தார். ஆனால், ரசிகா செய்த கஞ்சா பெண் கேரக்டருக்கு உரிய மெச்சூரிட்டி மாளவிகாவிடம் இருந்து வெளிப்படவில்லை. இதனால்அவரை பாதியில் வெட்டிவிட்டுவிட்டார் பாலா.

ஆனால், கர்நாடகத்தைச் சேர்ந்த மாளவிகாவுக்கு அவரது ஊரைச் சேர்ந்த அர்ஜூன் தனது படங்களில் எப்படியாவது வாய்ப்புப் பிடித்துதந்து வந்தார். இப்படி நேரில் போய் பார்த்ததால் தான் விவேக் தனது படத்தில் ஹீரோயின் சான்ஸ் வாங்கித் தந்தார். இந்த காமெடிப்படத்தை இயக்கப் போவது மெளலி.

இந் நிலையில் சந்திரமுகியில் எப்படியாவது இடம் பிடித்துவிட நினைத்து ரஜினிக்கு அன்பு டார்ச்சர் கொடுத்தார் மாளவிகா. நெடு நாட்கள்யோசித்துவிட்டு இப்போது அவருக்கு ஒரு ரோல் கொடுக்கச் சொல்லிவிட்டார் ரஜினி.

இதையடுத்து மும்பை, பெங்களூரை விட்டுவிட்டு சென்னைக்கே வந்துவிட்ட மாளவிகா, தீவிரமாக முயற்சி செய்து சரத்குமாரின் ஐயாபடத்திலும் ஒரு பாடலுக்கு சான்ஸ் பிடித்துவிட்டார்.

கவிதாலயா தயாரிக்கும் இந்தப் படத்தில் கே.பாலசந்தர் மற்றும் சரத்குமாரை நேரில் பார்த்து வாய்ப்பை வாங்கியிருக்கிறார் மாளவிகா.

தாமிரபரணி ராணி.. செந்தாமரை மேனி.. என்று தொடங்கி நான் தாலி கட்ட காத்துக்கிடக்கேன் என்று ஏடா கூடாமாகப் போகும் ஒருடமுக்குடப்பா டான்ஸ் பாடலுக்கு மாளவிகா அபிநயம் பிடித்திருக்கிறார்.

ஏவி.எம், பிரசாத் ஸ்டுடியோக்களில் போடப்பட்ட செட்களில் மாளவிகா கொஞ்சமாய் உடையில் வந்து சரத்குமாருடன் படா ஆட்டம்போட்டு கலக்கிவிட்டாராம் கலக்கி.

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு மாதிரி மாளவிகாவை நம் மனதில் நீண்ட நாட்களுக்கு பச்சக் என ஒட்ட வைத்துவிடுமாம் இந்தப்பாடலும் டான்சும்.

இதே போல சந்திரமுகியிலும் துக்கடா ரோலும் கூட்டத்தோடு ஆடும் ஒரு பாடல் காட்சி வாய்ப்பும் கிடைத்திருக்கிறதாம் மாளவிகாவுக்கு.

இதைத் தவிர கலைப்புலி தாணுவைச் சந்தித்து அவர் தயாரிக்கும் ஒரு படத்திலும், பிரஷாந்த் நடிக்கும் ஒரு படத்திலும், சந்துரு என்றபடத்திலும் சின்ன ரோல்களையும் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடும் வாய்ப்புக்களையும் பிடித்துவிட்டார் மாளவிகா.

கிடைப்பது சின்னச் சின்னச் ரோல்கள் தான் என்றாலும் அதை சந்தோஷமாய் செய்வதாய் சொல்கிறார் மாளவிா. அப்படியே தமிழில்நிலைத்துவிடும் மூடில் இருக்கும் அவர், சென்னையில் வீடு பார்த்து செட்டில் ஆகிவிடும் வேலையில் இறங்கியிருக்கிறார்.

அடிக்கடி வந்து ஹோட்டலில் டேரா போடுவதால் ஏகப்பட்ட பணம் வேஸ்ட் ஆவதால் இந்த முடிவாம்.

மாளவிகா துக்கடா ரோல்களில் நடிக்கும் சந்திரமுகி, ஐயா இரண்டு படங்களிலும் மெயின் ஹீரோயினாக நடிப்பது நயனதாரா என்பது சைட்தகவல்..

இதற்கிடையே தன் மாஜி காதலன் அஜய்க்கு தொடர்ந்து தூதுவிட்டுக் கொண்டே இருக்கிறாராம் மாளவிகா. ஆனால், இதுவரை நோரெஸ்பான்ஸாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil