காதலுக்கு வயசெல்லாம் கிடையாது...சின்ன பையனுடன் காதலா என்கிற கேள்விக்கு மாஸ்டர்நாயகியின் க்யூட் பதில்

திருவனந்தபுரம்: பேட்ட, மாஸ்டர், மாறன் படங்கள் மூலம் கோலிவுட் ரசிகர்களிடம் பிரபலமான மாளவிகா மோகனன் தற்போது மலையாளத்தில் பிஸியாகிவிட்டார்.

மலையாளத்தில் அவர் நடித்துள்ள கிறிஸ்டி என்ற திரைப்படம் அடுத்த மாதம் 17ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தில் மாளவிகா மோகனுக்கு ஜோடியாக அவரை விட வயது குறைந்த இளம் நடிகரான மேத்யூ தாமஸ் நடித்துள்ளார்.

இந்நிலையில், கிறிஸ்டி டீசர் வெளியானதை தொடர்ந்து Ask Malavika என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களுடன் உரையாடிய அவர், இளம் வயது ஆணுடன் காதல் வருமா என்ற கேள்விக்கு க்யூட்டாக பதிலளித்துள்ளார்.

 கோலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னி

கோலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னி

பிரபல சினிமாட்டோகிராஃபர் கே.யு. மோகனனின் மகளான மாளவிகா, மலையாளத்தில் பட்டம் போலே என்ற படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்த அவர், பிரபல ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் 'பியாண்ட் தி க்ளவுட்ஸ்' என்ற இந்தி படத்தில் நடித்து இன்னும் புகழ்பெற்றார். தமிழில் ரஜினியுடன் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வருகிறார்.

 வெளியானது கிறிஸ்டி டீசர்

வெளியானது கிறிஸ்டி டீசர்

இந்நிலையில், தற்போது மலையாளத்தில் கிறிஸ்டி திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஆல்வின் ஹென்ரி இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மாளவிகா மோகனுடன் கும்பளங்கி நைட்ஸ் பட புகழ் மேத்யூ தாமஸ் லீடிங் ரோலில் நடித்துள்ளார். தன்னை விட வயதில் மூத்த பெண்ணான மாளவிகா மோகனனை மேத்யூ தாமஸ் காதலிப்பது தான் படத்தின் கதை எனக் கூறப்படுகிறது.

 ட்ரெண்டான Ask Malavika ஹேஷ்டேக்

ட்ரெண்டான Ask Malavika ஹேஷ்டேக்

கிறிஸ்டி பிப்ரவரி 17ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக ask malavika என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களுடன் உரையாடினார் மாளவிகா மோகனன். அதில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு மாளவிகா மோகனன் பதிலளித்து வந்தார். "வயதில் மூத்த பெண், சிறிய வயது ஆண் இடையேயான காதல் பற்றிய உங்கள் கருத்து என்ன? கிறிஸ்டி படம் இதன் பின்னணியில் தான் உருவாகியுள்ளதாக நினைக்கிறேன்" என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

வயசெல்லாம் ஒரு விசயமா?

வயசெல்லாம் ஒரு விசயமா?

இதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன் "காதல் அந்தஸ்து, வயது, சமூக எல்லைகள் இவற்றையெல்லாம் பார்க்காது என நினைக்கிறேன். "லவ் லவ் தானே " ( love is love know ) என வெளிப்படையாக பதிலளித்துள்ளார். மாளவிகா மோகனனின் இந்த பதில் டிவிட்டரில் ட்ரெண்ட் அடித்து வருகிறது. மோனிகா பெலுச்சி நடிப்பில் வெளியான பிரபல 'மலெனா' திரைப்படம் போல கிறிஸ்டியும் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கிறிஸ்டி டீசரை பார்த்த ரசிகர்கள், படத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X