Don't Miss!
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Lifestyle
ஒயிட் சாஸ் பாஸ்தா
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
பர்த் டே பேபி மாளவிகா மோகனன்...இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா?
சென்னை : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் மாளவிகா மோனன் இன்று 29 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ், கன்னட, மலையாள மொழி சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன், தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.
மாளவிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ரசிகர்களுக்காக மாளவிகா பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
நார்த் இந்தியாவுல கூட நான் மாஸ்டர் ஹீரோயின் தான்.. விஜய்யோட ரீச் அப்படி.. மாளவிகா மோகனன் நச் பதில்!

தீபிகா இடத்தை பிடித்த மாளவிகா
Beyond the Clouds படத்தில் தீபிகா படுகோன் தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கைடசி நிமிடத்தில் தீபிகா மாற்றப்பட்டு, மாளவிகா அந்த ரோலில் நடித்தார். இந்த படத்தில் ஜெயிலில் நடக்கும் சீனில் நடிப்பதற்காக 15 நாட்களில் 8 கிலோ எடையை குறைத்துள்ளனர்.

மாளவிகாவிற்கு பிடித்த ஸ்டார்கள்
மாளவிகா மோகனனுக்கு பிடித்த நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், சாரா அலி கான் தான். அவருக்கு பிடித்த நடிகர்கள் அமிதாப் பச்சன், கார்த்திக் ஆர்யான்.

இதை மட்டும் மிஸ் பண்ணவே மாட்டார்
மாளவிகா மோகனன் ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்தக் கூடியவர். வழக்கமாக ஜிம்மிற்கு சென்று ஒர்க்அவுட் செய்யக் கூடியவர். ஒரு நாள் கூட ஒர்க் அவுட் செய்யவதையோ, யோகாசனங்கள் செய்வதையோ ஒரு நாள் கூட மிஸ் செய்வதே கிடையாது.

போட்டோகிராஃபர்
டைரக்டர் மோகனன் மகளான மாளவிகா மோகனன் நன்கு வரையும் திறமை கொண்டவர். மிக இளம் வயதிலேயே போட்டோ எடுப்பதில் கைதேர்ந்தவராக உள்ளார். இயற்கை அழகை படம் பிடித்து, அவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதையும், ஷோகேசில் வைப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார் மாளவிகா.

இவரை மிஞ்ச ஆளே கிடையாது
கேரளாவில் பிறந்து மும்பையில் வளர்ந்தவரான மாளவிகாவிற்கு மலையாள மக்கள் மற்றும் மகாராஷ்டிரா மக்களுக்கு பிடித்த சமையல்களை சமைப்பதில் கைதேர்ந்தவர். மீன் கறி சமைப்பதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை. அவருக்கு பிடித்த உணவும் மீன் தான்.

இதை மட்டும் கன்ட்ரோல் பண்ண முடியாது
தினமும் பல மணி நேரமும் ஒர்க் அவுட் செய்யும் மாளவிகா, டயட் பழக்கங்களையும் தவறாமல் கடைபிடிப்பார். ஆனால் இனிப்பு விஷயத்தில் மட்டும் அப்படி இல்லை. இத்தாலியன் டெசர்ட் கேக் வகைகள் என்றால் டயட் விஷயங்களை கடைபிடிப்பதில்லை.

ஃபேஷன் பிளாக்
ஃபேஷன்களை அதிகம் விரும்பக் கூடியவர் மாளவிகா. தனக்கென பிரத்யேகமாக ஃபேஷன் பிளாக்கை துவக்கி உள்ளார் மாளவிகா மோகனன். டிரெடிஷன் மற்றும் ஸ்டைலான உடைகள் மாளவிகாவின் ஃபேவரைட்.
-
ஒரே கல்லில் ரெண்டு மாங்கா..நயன் – விக்கி ஜோடியின் மாஸ்டர் பிளான்.. அப்போ ஹனிமூன் இல்லையா?
-
“புத்தம் புது இசை மலரை அறிமுகப்படுத்துகிறேன்”: ரோஜா 30ஆண்டுகள், ரஹ்மானுக்கு கிடைத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்
-
லோகேஷ் யுனிவர்ஸ் மாதிரி இப்ப கெளதம் யுனிவர்ஸ்: இங்கேயும் கமல் தான் வேட்டையாடி விளையாடப் போறாராம்!