பிகினி போட்டோ கேட்ட ரசிகர்...மாளவிகா மோகனன் பதிலுக்கு என்ன பண்ணிருக்கார் தெரியுமா ?

சென்னை : நடிகைகளிடம் ரசிகர்கள் வரம்பு மீறிய கேள்விகள் கேட்பதும், அதற்கு அவர்கள் பதிலடி கொடுப்பதும் ஒன்றும் புதிதில்லை. குஷ்பூ துவங்கி லேட்டஸ்ட் நடிகைகள் பலரும் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.

இதே நிலை தான் மாளவிகா மோகனனுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், இந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். இவர் ரஜினி நடித்த பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார். முதல் படத்திலேயே ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார்.

இரண்டாவதாக விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஹீரோயினாக சிறிய ரோலில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் பேசப்பட்டு, இவருக்கு தமிழில் ஃபேன்ஸ் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

மாஸ்டர் நாயகி மாளவிகா

மாஸ்டர் நாயகி மாளவிகா

மாஸ்டர் படத்திற்கு பிறகு தமிழில் டாப் ஹீரோயினாகி விட்ட மாளவிகா, இ்ன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி, அனைவரையும் கிறங்க வைத்து வந்தார். பிறகு தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடிக்க மாளவிக்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் பத்திரிக்கையாளர் ரோலில் நடித்திருந்தார்.

தமிழில் பட வாய்ப்பே இல்லை

தமிழில் பட வாய்ப்பே இல்லை

மாறன் படம் ஓடிடி.,யில் ரிலீசாகி, பெரும் தோல்வி படமாக அமைந்தது. இது போன்ற ஒரு படத்தில் நடிக்க தனுஷ் எப்படி ஒப்புக் கொண்டார் என்று வேறு பலரும் கேள்வி எழுப்பி, கடுமையாக விமர்சித்தனர். மாறன் படத்திற்கு பிறகு மாளவிற்காவிற்கும் தமிழில் பட வாய்ப்புக்கள் ஏதும் வரவில்லை, தற்போது இந்தியில் யுத்ரா என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடித்து வருகிறார்.

லைக்குகளை அள்ளும் மியூசிக் வீடியோ

லைக்குகளை அள்ளும் மியூசிக் வீடியோ

மாளவிகா தற்போது Tauba மியூசிக் வீடியோவில் நடித்துள்ளார். இதில் படுகவர்ச்சியாக உடையணிந்து, கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். இந்த மியூசிக் வீடியோ இன்று வெளியிடப்பட்டது. இந்த வீடியோ இதுவரை கிட்டதட்ட 3 மில்லியன் பார்வைகளை பெற்று விட்டது. இதில் மாளவிகாவின் நடனத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ரசிகர்களுக்கு பதிலளித்த மாளவிகா

ரசிகர்களுக்கு பதிலளித்த மாளவிகா

இதற்கிடையில் ட்விட்டரில் Asking Malavika மூலம் ரசிகர்களுடன் உரையாடினார் மாளவிகா. ரசிகர்கள் கேட்ட பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு அவர் பதிளித்தார். மிக ஜாலியாக, பொழுது போக்கான ரசிகர்களின் கேள்விகளுக்கு, மாளவிகாவும் கலகலப்பாக பதிலளித்தார். ரசிகர்கள் கேட்டதற்காக வித்தியாசமான முக பாவனைகள் காட்டிய வீடியோவை கூட மாளவிகா வெளியிட்டார்.

பிகினி கேட்ட ரசிகருக்கு மாளவிகாவின் பதில்

பிகினி கேட்ட ரசிகருக்கு மாளவிகாவின் பதில்

அதில் ரசிகர் ஒருவர், உங்களின் பிகினி போட்டோவை பதிவிடுங்கள் என சொல்லி கேட்டுள்ளார்.இதற்கு போட்டோ மூலமே பதிலடி கொடுத்துள்ளார் மாளவிகா. பிகினி போட்டோ கேட்ட ரசிகருக்கு பதிலளிக்கும் வகையில், தான் கோபமாக கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மாளவிகாவின் இந்த பதிலுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. பிகினி போட்டோ கேட்ட அந்த நபரை மாளவிகாவின் தீவிர ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X