Malavika Mohanan: 5 கோடி சம்பளத்திற்காக.. 70 வயது நடிகருக்கு ஜோடியாகும் மாளவிகா மோகன்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனுக்கு தற்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த படங்களிலும் இல்லாததால், வேறு வழியே இல்லாமல் 70 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாக கமிட்டாகி உள்ளார்.
நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தை தொடர்ந்து மாஸ்டர், மாறன் என அடுத்தடுத்த படத்தில் நடித்தார். அந்த படங்கள் வரவேற்பை பெற்ற போதும், மாளவிகா மோகனுக்கு தமிழில் பெரிதாக எந்த வாய்ப்பும் வரவில்லை. பின் இரண்டு ஆண்டுகள் கழித்து தங்கலான் படம் வெளியானது அந்த படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் இல்லாததால் மோகன்லாலுக்கு ஜோடியாக 'ஹிருதயபூர்வம்' என்ற மலையாள படத்தில் நடித்தார் மாளவிகா மோகனன்.

சிரஞ்சீவிக்கு ஜோடி: இந்த நிலையில் தற்போது, சிரஞ்சீவியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான 'மெகா158' திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் கமிட்டாகி உள்ளார். இந்த படத்தில் நடிக்க மாளவிகா மோகனுக்கு ரூ. 5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் பாபி கொல்லி இயக்கத்தில் உருவாகும் இந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம், நவம்பர் 5 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கவுள்ளது. இந்தத் தகவல், மெகாஸ்டார் ரசிகர்களிடையே மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மெகா 158: சிரஞ்சீவி பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வபடங்களில் பிசியாக உள்ளார். 'மெகா158' தவிர, ஆக்ஷன் ஃபேன்டசி படமான 'விஸ்வம்பரா'வும் அவருடைய பட்டியலில் உள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் அனில் ரவிபுடி இயக்கும் படங்களிலும் அவர் நடிக்கவுள்ளார். தற்போது, சிரஞ்சீவி அனில் ரவிபுடி இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் 'மானா சங்கர வரப்பிரசாத் காரு' திரைப்படம், 2026 பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாடலா 'மீசாள பில்லா' பாடல் அண்மையில் வெளியானது. இந்த பாடலலை உதித் நாராயண் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடி இருந்தனர்
மாளவிகா மோகன்: மாளவிகா மோகனன் கடைசியாக மோகன்லால் நடிப்பில் வெளியான 'ஹிருதயபூர்வம்' என்ற மலையாளப் படத்தில் நடித்திருந்தார். சத்யன் அந்திக்காடு இயக்கிய இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது மாளவிகா மோகனன் பிரபாஸ் நடிக்கும் திகில் நகைச்சுவைப் படமான 'தி ராஜா சாப்'பில் நடிக்கவுள்ளார். மாருதி இயக்கும் இந்தத் திரைப்படம், அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சஞ்சய் தத், நிதி அகர்வால், ரித்தி குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











