»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு மாளவிகா மீண்டும் தமிழில் ஒரு ரவுண்ட் வரும் நம்பிக்கையுடன்காத்திருக்கிறார்.

அவரது சொந்த ஊரான கன்னட தேசத்தைச் சேர்ந்த அர்ஜூன் நடித்த மணிகண்டாவில் அவருக்காகவே ஒருகேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழில் மாளவிகாவுக்கு சானஸ்கள் ஓய்ந்த நிலையில் முயற்சித்துப் பார்த்துவிட்டு டிவி விளம்பரங்களில் செட்டில்ஆனார் மாளவிகா.

இந் நிலையில் தான் பிதாமகனில் நடிக்க பாலா கூப்பிட்டார். ஆர்வத்துடன் ஓடி வந்தமாளவிகாவை வைத்து இரண்டு நாட்கள் சூட்டிங் நடத்திவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார். பின்னர் அந்த ரோலில்ரசிகா நடித்தது தனி கதை.

டிவி விளம்பரங்களில் நடிப்பதற்காக மும்பையில் குடியேறிய மாளவிகா அப்படியே இந்தித் திரையுலகின்முன்னணி ஹீரோக்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து சான்ஸ் கேட்டார்.

தனிப்பட்ட சந்திப்புகளின் பலனாகடர்னா மனா ஹை உள்பட இரு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், அங்கு ஒரு படத்தை குறைந்தபட்சம் 3 வருடமாவது எடுப்பார்கள் என்பதால், உடனடியாகமாளவிகாவுக்கு பிரேக் ஏதும் இல்லை. அதனால் சென்னை, ஹைதராபாத்துக்கும் அவ்வப்போது பறந்து, பறந்துசான்ஸ் வேட்டையில் இறங்கினார்.

இப்படிக் கிடைத்தது தான் மணிகண்டா படம். இதில் ஹீரோயின் ஜோதிகா தான் என்றாலும் கிளாமர் ரோல்ஒன்றை படத்தில் நுழைத்து அதில் மாளவிகாவை நுழைத்திருக்கிறார் அர்ஜூன். படப்பிடிப்பு கிட்டத்தட்டமுடிவடைந்துவிட்டது.

இதில் விந்தியாவுக்குப் போட்டியாக கவர்ச்சியாட்டம் போட்டுள்ளாராம்.

இதனால் இந்தப் படம் வெளியானால்தனக்கு அந்த ரேஞ்சிலாவது தமிழில் ஒரு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார் மாளவிகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil