»   »  கையில் கரன்சி, கலக்கல் டான்ஸு!!

கையில் கரன்சி, கலக்கல் டான்ஸு!!

Subscribe to Oneindia Tamil
Malavika
பேசிய சம்பளத்தை பைசா பாக்கியில்லாமல் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன். இல்லாவிட்டால் அது எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் அது எனக்குத் தேவையில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் மாளவிகா.

ஒற்றைப் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதை திருமணத்திற்குப் பிறகு தீவிரப்படுத்தியுள்ள மாளவிகாவுக்கு தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படவுலகிலிருந்து தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

சமீபத்தில், ஒரு இந்திப் படத்தில் கவர்ச்சி நடனம் ஆட மும்பை போன மாளவிகாவுக்கு பேசியபடி சம்பளம் தராத்தால், அந்தப் படத்தில் ஆட மறுத்து விட்டு அதிரடியாக சென்னைக்குத் திரும்பினார். படத்தின் தயாரிப்பு நிர்வாகிகள், சென்னைக்கு வந்து அவருடைய ஹோட்டல் ரூம் வாசலில், தவமாய் தவம் கிடக்க வேண்டி வந்தது.

கடைசியில், பேசிய தொகைக்கு மேல் ஒரு லட்சம் கூடுதலாக கொடுத்து பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட்டும் எடுத்துக் கொடுத்த பிறகுதான் மும்பைக்கு பறந்தாராம் மாளவிகா (இத்தனைக்கும் இவரது கணவர் மும்பையில் பெரிய தொழிலதிபர் என்று சொல்லிக் கொள்கிறார்).

பாலிவுட் ஆட்டத்தை முடித்துக் கொண்டு, குருவியில் விஜய்யுடன் ஆட்டம் போட வந்த மாளவிகா கூறியதாவது: பெரிய படம், சின்னப் படம் என்று எனக்கு எந்த வித்தியாசமும் கிடையாது. திறமைக்கு மதிப்பு கொடுத்து கேட்கிற சம்பளத்தையும் கொடுத்தால், எந்தப் படத்திலும் நடிப்பேன்.

இந்திப் படத்தில் நான் நடிக்காமல் வந்த்தற்குக் காரணம் அவர்கள் என்னை மட்டமாக நினைத்ததுதான். தென்னிந்திய பெண்தானே, கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக் கொள்வாள் என்று நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது. நடிப்பு என்பது எனக்கு தொழில். அதற்கான ஊதியம் சரியாகக் கிடைக்க வேண்டும்.

தமிழிலிலும கூட சில இயக்குநர்கள் ஒற்றைப் பாடலுக்கு நடனம் ஆடும் நடிகைகளை சாதாரணமாக நினைத்து விடுகிறார்கள். நானும் ஒரு நேரத்தில் கதாநாயகியாக கொடி கட்டிப் பறந்தவள்தான். ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுவதால், என்னுடைய மதிப்பு குறைந்து விடவில்லை.

குருவி படத்தில் விஜய்யுடன் நடிப்பதில் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி என்றார் மாளவிகா.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil