»   »  ராசிக்கார மாளவிகா!

ராசிக்கார மாளவிகா!

Subscribe to Oneindia Tamil


மாளவிகா தனது படத்தில் இருந்தால் சென்டிமன்டலாக அப்படம் வெற்றி பெறும் என நடிகர் ஜீவன் நம்புகிறாராம். இதனால் தனது மச்சக்காரன் படத்தின் அறிமுகப் பாடலில் மாளவிகாவின் ஆட்டம் இடம் பெற வேண்டும் என்று விரும்பி அதன்படி மாளவிகாவையும் ஆட வைத்துள்ளாராம்.


மாளவிகாவின் முதல் பாதி கேரியர் படு சொதப்பலானது. சின்னச் சின்னப் படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் ஹீரோயின் வாய்ப்புகள் மங்கவே இந்திக்குப் போனார். அங்கு போன நேரமோ என்னவோ தமிழில் புதிய பட வாய்ப்புகள் தேடி வந்தது.

அதற்குக் காரணம் இந்தியில் மாளவிகா காட்டிய தித்திக்கும் கிளாமர். இதை வைத்து மீண்டும் தமிழுக்கு வந்த மாளவிகாவுக்கு, வாள மீனு பாட்டு பெரிய பிரேக்கைக் கொடுத்தது. சந்தோஷத்துடன் பல புதுப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் மாளவிகா.

திருட்டுப் பயலே படத்தில் மாளவிகா போட்ட வேடம், அவருக்கு செமத்தியான வரவேற்பை வாரிக் கொடுத்தது. சமீபத்தில் வந்து பெரும் ஹிட் ஆன நான் அவனில்லை படமும் மாளவிகாவுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.

இந்த இரண்டு படங்களிலும், ஹீரோ ஜீவன். இப்போது ஜீவன் என்ன நினைக்கிறார் என்றால், தனது படத்தில் கண்டிப்பாக மாளவிகா இடம் பெற வேண்டும். அவர் இருந்தால் படம் சூப்பர் ஹிட் என்று நம்புகிறாராம்.

இதையடுத்து தான் நடித்து வரும் மச்சக்காரன் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்காத குறையாக மாளவிகாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒப்புக் கொள்ள வைத்துள்ளாராம். பாட்டும் படு ஜிலுஜிலுப்பாக வந்துள்ளதாம்.

ஏற்கனவே மச்சக்காரனில் நாயகியாக நடித்து வரும் காம்னா ஜெட்மலானி கவர்ச்சியில் கரைபுரண்டோடியுள்ளாராம். இந்த நிலையில் மாளவிகா என்ற கூடுதல் கவர்ச்சியைத் திறந்து விட்டிருப்பதால், ரசிகர்களின் இதய அணை உடையப் போவது நிச்சயம் என்கிறார்கள் கோலிவுட்டில்.

மாளவிகா இப்போது கை நிறையப் படங்களும், முகம் நிறைய சந்தோஷமுமாக ஜாலியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது சுதந்திரத்திற்கு கொஞ்சம் கூட தடை சொல்லாமல் சமர்த்துப் புருஷனாக மாளவிகாவை ரசித்துக் கொண்டிருக்கிறாராம் கணவர் சுமேஷ் மேனன்.

கல்யாணத்திற்குப் பிறகும் படு பிசியாக கல்லா கட்டுவதில் புதிய சாதனை படைத்துள்ளார் மாளவிகா. அவருக்கு சூப்பரான இடத்தில் மச்சம் இருக்கும் போல!

Read more about: jeevan, malavika
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil