»   »  'அந்த 2 மணிநேர நரகம்': முதல்முறையாக மனம் திறந்து பேசிய நடிகை

'அந்த 2 மணிநேர நரகம்': முதல்முறையாக மனம் திறந்து பேசிய நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: என்னை கடத்திய சம்பவம் பணத்திற்காக நடந்தது போன்று இல்லை. இதற்கு பின்னால் சதி உள்ளது என்று பிரபல மலையாள நடிகை தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகை படப்பிடிப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது தனது முன்னாள் கார் டிரைவரால் கடத்தப்பட்டு 2 மணிநேரம் மானபங்கப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் இது குறித்து அவர் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் மலையாள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

துணிச்சல்

துணிச்சல்

சினிமா நட்சத்திரங்களை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் செல்லும் டிரைவருக்கு எப்படி கடத்தும் அளவுக்கு துணிச்சல் வந்தது? யார், எதற்காக, ஏன்? இந்த கேள்விகளுக்கு பதிலே கிடைக்கவில்லை.

சதி

சதி

சினிமா துறையில் உள்ள என் எதிரிகள் தான் இந்த சம்பவத்திற்கு பின்னால் இருக்கிறார்கள் என்று நான் கூற மாட்டேன். இது பணத்திற்காக நடந்தது போன்று இல்லை. இதற்கு பின்னால் சதி உள்ளது.

போராடுவேன்

போராடுவேன்

எனக்கு பல கேள்விகள் உள்ளன. அதற்கு சரியான பதில் தேவை. நான் ஜெயிக்கும் வரை போராடுவேன். அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி நிரந்தர நண்பர்களோ, எதிரிகளோ இல்லை.

எதிரிகள்

எதிரிகள்

எனக்கு சினிமா துறையில் நிரந்தர நண்பர்களும் உண்டு, எதிரிகளும் உண்டு. நான் செய்யாத தவறுக்கு ஒருபோதும் மன்னிப்பு கேட்டது இல்லை. இது எனக்கு நடந்தால் யாருக்கும் வேண்டுமானாலும் நடக்கலாம். இது குறித்து என்னால் வெளியே பேச முடிந்தது என்றால், அனைவராலும் முடியும்.

அமைதி

அமைதி

எனக்கு நடந்தது போன்ற சம்பவம் நடந்தால் தயவு செய்து அதை மூடி மறைக்காதீர்கள். குற்றவாளிகள் தப்ப நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்? பெண்கள் அல்ல குற்றம் செய்தவர்கள் தான் வலியை அனுபவிக்க வேண்டும்.

சம்பவம்

சம்பவம்

இந்த சம்பவத்தை நான் மூடி மறைக்க நினைத்திருந்தால் இது குறித்து ஒரு 10 பேருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். நான் வாழ்நாள் முழுவதும் வேதனையுடன் வாழ்ந்திருப்பேன்.

English summary
Malayalam actress has talked about her abduction for the first time. She said that it was not done for money.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil