»   »  பத்மினி சேச்சி தொடங்கி நஸ்ரியா வரை தொன்று தொட்டு தொடரும் மலையாள நடிகைகள் ஆதிக்கம்!

பத்மினி சேச்சி தொடங்கி நஸ்ரியா வரை தொன்று தொட்டு தொடரும் மலையாள நடிகைகள் ஆதிக்கம்!

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் உள்ளூர் நடிகைகளை விட அண்டை மாநிலமான மலையாள தேசத்து நடிகைகளின் ஆதிக்கம் எப்போதுமே உண்டு.

லலிதா, பத்மினி, ராகினி, சுகுமாரி, கே.ஆர்.விஜயா, என 60 களில் தொடங்கிய ஆதிக்கம் எண்பதுகளில் அம்பிகா, ராதா, ஊர்வசி, கல்பனா நீடித்தது

மீரா ஜாஸ்மின், அசின், காவ்யா மாதவன், காவேரி, என பல நடிகைகள் மலையாள தேசத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டில் சூப்பர்ஹிட் நடிகையாக வலம் வந்துள்ளனர். இன்றைக்கும் நயன்தாரா, நஸ்ரியா நசீம், லட்சுமி மேனன் என பல மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவை கைப்பற்றியுள்ளனர்.

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்

குடும்பப்பாங்கான கிராமத்து வேடத்தில் அசத்திய லட்சுமி மேனன் கையில் அரைடஜன் படங்கள் உள்ளன. இளம் நடிகர்களின் முதல் சாய்ஸ் லட்சுமிமேனன்.

நஸ்ரியா நசீம்

நஸ்ரியா நசீம்

நேரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த நஸ்ரியாவிற்கு நல்ல நேரம்தான் ஜெய், கார்த்தி, ஆர்யா, என பல இளம் நடிகர்கள் நஸ்ரியாவை புக் செய்யுங்கள் என்கின்றனராம். இவரது கையிலும் அரைடஜன் படங்கள் உள்ளதாம்.

பார்வதி மேனன்

பார்வதி மேனன்

பூ படத்தில் அறிமுகமாகிய இந்த நாயகி இப்போது மரியான் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார். இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்படுகிறது.

நயன்தாரா

நயன்தாரா

தற்போது, இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் பரபரப்பான நடிகையாக மார்க்கெட்டில் இருக்கிறார் நயன்தாரா. அஜித், ஆர்யா என பிஸியான ஹீரோக்களுடன் இன்றைக்கும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அமலாபால்

அமலாபால்

மைனாவில் ஹிட் அடித்த அமலாபால் விஜய் உடன் தலைவாவில் நடித்து முன்னணி நடிகையாகிவிட்டார்.

அனன்யா

அனன்யா

நாடோடிகள் படத்தில் நடித்து சூப்பர் ஹிட் நடிகை என்று பெயரெடுத்தவர் அனன்யா, பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

ஓவியா

ஓவியா

களவாணி படத்தில் அறிமுகமான ஓவியா மீண்டும் கோலிவுட்டில் நுழைந்துள்ளார்.

அசின்

அசின்

அறிமுகம் சாதாரணமாக இருந்தாலும் கஜினி படத்திற்குப் பின்னர் சூப்பர் ஹிட் நடிகையாக உயர்ந்தார் அசின். விஜய், அஜித் என சூப்பர் ஹீரோக்களுடன் நடித்தவர் பாலிவுட் சூப்பர் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

மீரா ஜாஸ்மின்

மீரா ஜாஸ்மின்

ரன் படத்தில் அறிமுகமான மீரா ஜாஸ்மின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். விஜய், அஜித், மாதவன், விஷால் என பிரபல நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தார்.

கோபிகா – பாவனா

கோபிகா – பாவனா

கோபிகா, பாவனா, நவ்யா, நாயர், காவ்யா மாதவன், அஞ்சு அரவிந்த், மீரா ந்நதன், ரீமா கலிங்கல் என பல மலையாள நடிகைகள் தமிழ் படங்களில் நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். சில நடிகைகள் கோடம்பாக்கத்தில் என்ட்ரியாகி பத்தாண்டுகளாக நீடித்து வரும் நடிகைகளாக இருக்கிறார்கள்.

ஆந்திராவுக்கு போன அஞ்சலி

ஆந்திராவுக்கு போன அஞ்சலி

இவர்களையடுத்து தற்போது புற்றீசல்கள் போல் கோடம்பாக்கத்தை நோக்கி கேரளத்து பைங்கிளிகள் படையெடுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மார்க்கெட்டில் இருக்கும் காஜல்அகர்வால், அஞ்சலி, டாப்ஸி, பிந்துமாதவி போன்ற நடிகைகளே சரியான படவாய்ப்புகள் இன்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவை நாடிச்செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இனி பத்தாண்டுகளுக்கு

இனி பத்தாண்டுகளுக்கு

இப்போது மட்டுமல்ல இனி பத்தாண்டுகளுக்கு தமிழ் சினிமா மலையாள நடிகைகளின் கையில்தான் இருக்கும் என்கின்றனர் கோலிவுட் பட உலகினர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Malayalee actresses in Tamil like Asin, Nayanthara, Meera Jasmine, Navya Nair, Gopika and Bhavana among others have only fuelled this gold rush to Kollywood. The fact that 60 per cent of the girls interviewed by a Malayalam magazine for a survey wanted to take up acting in Tamil films as a career is proof enough.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more