»   »  கன்னடத்தில் மல்லிகா கபூர்!

கன்னடத்தில் மல்லிகா கபூர்!

Subscribe to Oneindia Tamil

தமிழ் கைவிட்டு விட்ட விசனத்தில் இருந்து வந்த மல்லிகா கபூர் இப்போது கன்னட திரையுலகத்தின் பக்கம் திரும்பியுள்ளார்.

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தின் மூலம் தமிழிக்கு அறிமுகானவர் மல்லிகா கபூர். அதற்கு முன்பு அற்புத்தீவு என்ற மலையாளப் படத்தில் மண்டையைக் காட்டியிருந்தார்.

அழகாய் இருந்தும், அமர்க்களமாக கிளாமர் காட்டியும் மல்லிகாவுக்கு அடுத்தடுத்து யாரும் வாய்ப்பு தரவில்லை. அர்ஜூன் மட்டும் தனது வாத்தியார் படத்தில் வாய்ப்பு தந்து தேறுதல் கொடுத்தார்.

ஆனால் அதற்குப் பிறகு தமிழிலும், மலையாளத்திலும் மல்லிகாவை சீந்துவார் யாரும் இல்லை. இதனால் கன்னடத்தின் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளார் மல்லிகா.

சந்தோஷ் இயக்கும் சவி சவி நெனப்பு என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். என்ன திடீர் கன்னடப் பாசம் என மிஸ். கபூரிடம் கேட்டபோது, கன்னடத்தை தவிர அனைந்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து இருக்கிறேன். இப்போது கன்னட படத்தில் நடிக்கவுள்ளேன்.

தெலுங்கில் வெளியான மஹா படத்தை பார்த்துவிட்டு இதில் என்னை இந்த படத்தில் நடிக்க கேட்டனர். எனக்கு படத்தின் கதை ரொம்ப பிடித்ததால் நானும் ஒத்துக்கொண்டேன்.

எனது ஆசை, கனவு எல்லாம் எப்படியாவது தென்னிந்திய நடிகைகளில் நம்பர் 1 நடிகையாக வர வேண்டும் என்பது தான். ஆனால் அதுதான் எனது லட்சியம் என்று கூற மாட்டேன். நல்ல நடிகையாக பல நல்ல படங்களை செய்ய விரும்புகிறேன் என அழகாய் சிரித்த படி கூறினார் மல்லிகா.

கன்னடத்திலாவது மல்லிகை மணக்குமா?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil