»   »  ஹாலிவுடை கலக்க போகும் மல்லிகா

ஹாலிவுடை கலக்க போகும் மல்லிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜாக்கிசானுக்கு ஜோடியாக மித் என்ற ஆங்கிலப் படத்தில் பாலிவுட் ஹீரோயின் மல்லிகா ஷெராவத் நடிக்கிறார்என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இப்போது படத்தைப் பற்றி மேலும் சில செய்திகள்.

கதைப்படி படத்தின் சில காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட வேண்டும். படத்தின் தயாரிப்பாளர் பார்பி டங்இந்தியாவில் படமெடுத்து அனுபவம் இல்லாதவர். எதற்கு இங்கு வந்து ரிஸ்க் எடுக்க வேண்டும் என்றுயோசித்தவர், ஏதாவது ஒரு இந்திய படக் கம்பெனியுடன் இணைந்து படம் எடுக்கும் முடிவுக்கு வந்தார்.

அதனையடுத்து இயக்குநர் ஸ்டான்லியுடன் இந்தியா வந்த பார்பி, இருப்பதில் எது பெரிய கம்பெனி என்றுபார்த்து கலைடாஸ்கோப் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தை அணுகினார். பாண்டிட் குயின், அலைபாயுதேபடத்தின் இந்தி ரீமேக்கான சாதியா ஆகிய படங்களை எடுத்தது இந்தக் கம்பெனிதான்.

பார்பி வந்து கேட்டதும், கலைடாஸ்கோப் நிறுவனத்தார் உடனே ஒப்புக்கொண்டதோடு, லொகேஷன் பார்க்கவும்அழைத்துப் போனார்கள். குலுமணாலி, ஜெய்ப்பூர், உதய்பூர், ஹம்பி ஆகிய இடங்களைப் பார்த்தவர்கள்கடைசியில் ஹம்பியில் படப்பிடிப்பை நடத்தத் தீர்மானித்தனர்.

லொகேஷன் ரெடி. அடுத்து இந்திய இளவரசி வேடத்தில் யாரைப் போடலாம் என்று பல முன்னணி நடிகைகளைப்பரிசீலித்தார்கள். ஹாலிவுட் ரேஞ்சிற்கு கவர்ச்சி காட்ட மல்லிகாதான் சரி என்று முடிவெடுத்தவர்கள், அவரைஹாங்காங் அழைத்துப் போனார்கள். மேக்கப் டெஸ்ட், ரிகர்ஸலில் மல்லிகா அசத்த அவரே கதாநாயகியானார்.

அதன்பின்பு முதல் கட்ட படப்பிடிப்புக்காக மல்லிகா மீண்டும் ஹாங்காங் போனார். விமான நிலையத்தில் அவருக்குஇன்ப அதிர்ச்சி. அவரை வரவேற்க அங்கே காத்துக் கொண்டிருந்தது சாட்சாத் ஜாக்கிசான்தான்.

திரையில் பார்த்து ரசித்தவர் தன்னை வரவேற்க நேரில் வந்ததும் மெய் சிலிர்த்துப் போனார் மல்லிகா. அங்குஅவருக்கு மேலும் ஒரு இனிய அதிர்ச்சி காத்திருந்தது.

படத்தில் கதைப்படி மல்லிகா கராத்தே சண்டை போடவேண்டும். ஆனால் அவருக்குத் துளி கூட கராத்தே தெரியாது.

யாராவது ஒருவர் தனக்கு கராத்தே கற்றுத் தருவார் என்ற நினைத்த மல்லிகாவுக்கு அந்த யாராவது ஒருவர்ஜாக்கிசானாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஜாக்கிசானிடம் கராத்தே கற்றுக் கொண்டு முதற்கட்டபடப்பிடிப்பில் எதிரிகளை பந்தாடி விட்டு இந்தியா வந்திருக்கிறார்.

மல்லிகா மும்பை வந்து விட்டார் என்று கேள்விப்பட்டதும் தமது அடுத்த படத்தில் அவரை புக் செய்ய பாலிவுட்டின்பிரபல தயாரிப்பாளர்கள் மகேஷ்பட், ராம்கோபால் வர்மா, போனிகபூர் ஆகியோர் வந்துள்ளனர். ஆனால்அவர்களின் படங்களில் நடிக்க மல்லிகா மறுத்துவிட்டார்.

ஏனென்று கேட்டபோது, அவங்க சொன்ன கதையெல்லாம் பிடிக்கவில்லை என்று சிம்பிளாக தனது பதிலைமுடித்துக் கொண்டார்.

இப்போது மித் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் கர்நாடக மாநிலம் ஹம்பியில் தொடங்குகிறது.அதற்காக ஜாக்கிசான் இரண்டு வார பயணமாக இந்தியா வருகிறார்.

அப்போது ஜாக்கிசானை தனது வீட்டிற்கு அழைத்துப் போக வேண்டும் என்று முடிவெடுத்திருக்கும் மல்லிகா,பாலிவுட்டை ஒரேயடியாக மறந்து விடவும் இல்லை.

கதை சரியில்லை என்று பிரபல தயாரிப்பாளர்களின்படங்களில் நடிக்க மறுத்தாலும், இன்னொரு பக்கம் ராஜ்குமார் சந்தோஷி, கோவிந்த்மேனன், ஹரிஸ் சுகந்த்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இதில் எல்லாம் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், கதாநாயகனை புக் செய்வதற்கு முன்பாகவே இந்தப்படங்களில் மல்லிகாவை புக் செய்ததுதான். இது இந்தி படவுலகில் இதுவரை வழக்கத்தில் இல்லாதது என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil