»   »  கடும் குளிர் - மயங்கிய மல்லிகா கபூர்

கடும் குளிர் - மயங்கிய மல்லிகா கபூர்

Subscribe to Oneindia Tamil
Mallika Kapoor
அந்தோணியார் படத்தின் பாடல் காட்சிக்காக குலு மனாலி சென்றிருந்த நடிகை மல்லிகா கபூர், கடும் குளிரைத் தாங்க முடியாமல் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனால் ஒரு நாள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஷாம், மல்லிகா கபூர் நடிக்கும் படம் அந்தோணியார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை சுற்றுப்புறங்களில் நடந்து வந்தது. இந்த நிலையில் 2 பாடல்களைப் படமாக்குவதற்காக குலு மனாலிக்கு படக்குழுவினர் சென்றிருந்தனர்.

மொத்தம் 5 நாட்கள் குலு மனாலியில் முகாமிடத் தீர்மானித்திருந்தனர். இவர்கள் சென்ற நேரத்தில் கடும் குளிரும், பனிப்பொழிவும் இருந்தது. மேலும், மைனஸ் 5 டிகிரி அளவுக்கு கடும் குளிர் வாட்டியதால் படக்குழுவினர் நடுங்கியபடிதான் பாடல் காட்சியைப் படமாக்கினர்.

இந்த நிலையில் நாயகி மல்லிகா கபூர், குளிரைத் தாங்கும் ஆடைகளை அணியாமல் நடனமாடியுள்ளார். இதனால் குளிரைத் தாங்க முடியாமல் வெடவெடவென நடுங்கிய அவர் வாந்தி எடுத்தார். தொடர்ந்து அவர் மயங்கி விழுந்தார்.

அதிர்ச்சி அடைந்த இயக்குநர் பாண்டி, படப்பிடிப்பை நிறுத்தினார். பின்னர் அவரும், நாயகன் ஷாம், தயாரிப்பாளர் விஜயக்குமார் ஆகியோர் மல்லிகாவை அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மல்லிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிறகு ஒரு நாள் முழுவதும் ஓய்வில் இருந்தார் மல்லிகா கபூர். பிறகு உடல் நலம் சரியானதும் படப்பிடிப்பைத் தொடர்ந்தனராம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil