»   »  பாரீஸில் நடிகை மல்லிகா ஷெராவத்தை தாக்கிய முகமூடி கொள்ளையர்கள்

பாரீஸில் நடிகை மல்லிகா ஷெராவத்தை தாக்கிய முகமூடி கொள்ளையர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் மற்றும் அவரது ஆண் நண்பர் பாரீஸில் முகமூடி அணிந்த நபர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். பாரீஸில் அவர் தனது ஆண் நண்பர் சிரிலுடன் தங்கியுள்ளார். இந்நிலையில் அபார்ட்மென்ட்டில் இருந்து வெளியே வந்த மல்லிகா மற்றும் அவரது நண்பரை முகமூடி அணிந்த 3 பேர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கியுள்ளனர்.

அந்த 3 பேரும் மல்லிகாவை கையால் குத்தியுள்ளனர்.

கைப்பை

கைப்பை

முகமூடி நபர்கள் மல்லிகாவின் கைப்பையை பறிக்க முயன்று தோல்வி அடைந்து அங்கிருந்து ஓடிவிட்டனர். இது குறித்து மல்லிகா பாரீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கொள்ளை முயற்சி

கொள்ளை முயற்சி

மல்லிகாவிடம் கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைப்பையை பறிக்க முயன்ற நபர்கள் எதையுமே எடுக்காமல் சென்றது வியப்பளிக்கிறது என்கிறார்கள் போலீசார்.

கிம் கர்தாஷியன்

கிம் கர்தாஷியன்

அமெரிக்காவை சேர்ந்த டிவி ரியாலிட்டி ஷோ நடிகையான கிம் கர்தாஷியன் ஃபேஷன் ஷோவில் கலந்து கொள்ள கடந்த அக்டோபர் மாதம் பாரீஸ் வந்தபோது கொள்ளையர்கள் அவரது ஹோட்டல் அறைக்குள் புகுந்து கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றனர்.

பயந்த கிம்

பயந்த கிம்

கொள்ளை சம்பவத்தால் பயந்த கிம் முதல் வேலையாக பாரீஸுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு தனி விமானத்தில் அமெரிக்கா பறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Mallika Sherawat and her friend were tear gassed and attacked by masked men in Paris.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil