»   »  'மாண்புமிகு' மல்லிகா ஷெராவத்!

'மாண்புமிகு' மல்லிகா ஷெராவத்!

Subscribe to Oneindia Tamil
Mallika Sherawat

பாலிவுட் கிளாமர் புயல் மல்லிகா ஷெராவத், ஒரு புதிய படத்தில் அரசியல்வாதி வேடத்தில் வந்து அசத்தவுள்ளார்.

கிளாமர், கிளாமர், கிளாமரைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை தாரக மந்திரமாக கொண்டு பாலிவுட் ரசிகர்களை எப்போதும் குளிர்வித்து வரும் கிளாமர் புயல் மல்லிகா.

எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அதில் கிளாமரைக் கலந்து விடும் அரும் திறமை படைத்த அபார நடிகை.

அப்படிப்பட்ட மல்லிகா ஷெராவத் ஒரு புதிய இந்திப் படத்தில் அரசியல்வாதியாக நடிக்கவுள்ளாராம்.

குந்தன்ஷா இயக்கும் மஸ்கூரட் (Masquerade) என்ற அப் படம், அரசியலை காமெடியாக நையாண்டி செய்து எடுக்கப்படும் படம் ஆகும். இந்திய அரசியலின் அலங்கோல, அவல நிலையை ஜாலியாக எடுக்கவுள்ளனர்.

இப்படத்தில் மல்லிகாதான் நாயகி. விபச்சாரியாக இருக்கும் மல்லிகா, படிப்படியாக உயர்ந்து முதல்வராகி விடுகிறார். இதுதான் இப்படத்தின் கதையாம்.

இந்தக் கேரக்டர் குறித்து குந்தன் ஷா சொன்னவுடனேயே ஜாலியாகி விட்டாராம் மல்லிகா. இதைத்தான், இப்படி ஒரு கதையைத்தான் எதிர்பார்த்தேன் என்று குஷியான மல்லிகா, உடனே நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

இப்படத்தின் மூலம் செக்ஸியாகத்தான் வந்து போக முடியும் என்ற தன் மீதுள்ள கருத்தை துடைத்து, நன்றாக நடிக்கவும் தெரியும் என்பதை நிரூபிக்கப் போகிறாராம் மல்லிகா.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்து அடுத்த ஆண்டு இறுதியில் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil