»   »  என்னை காதலிப்பது கஷ்டம்: மல்லிகா

என்னை காதலிப்பது கஷ்டம்: மல்லிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னுடைய கேரக்டருக்கு எந்த ஆணுமே காதலனாக கிடைக்க மாட்டான் என்கிறார் ஆட்டோகிராப் மல்லிகா.

ஆட்டோகிராஃப் படத்தில் நடித்த ஸ்னேகா, கோபிகா, மல்லிகா மூவரில் ஸ்னேகாவுக்கு எப்போதும் போலவாய்ப்புகள் வந்தபடிதான் இருக்கின்றன. ஆஹா ஓஹோ என்ற பேசப்பட்ட கோபிகாவுக்கு எதிர்பார்த்தபடிவாய்ப்புகள் குவியவில்லை. சில குறிப்பிட்ட சான்ஸ்களே கிடைத்துள்ளன.

அதே நேரத்தில் படத்தில் மிக அழகாக நடித்த மல்லிகாவை கோடம்பாக்கம் ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல்விட்டாலும், இப்போது அவரைத் தேடிப் போகும் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை கணிசமாகியுள்ளது. திருப்பாச்சி,ராஸ்கல், மகா நடிகன், லட்சுமி மூவி மேக்கர்ஸின் புதிய படம், மற்றும் மலையாளத்தில் நேருக்கு நேர் எனஇப்போது பிஸி நடிகையாகி இருக்கிறார்.

ஆனால், எல்லாமே அக்கா, தங்கச்சி ரோல்கள், செகண்ட் ஹீரோயின் ரோல்கள் தான். இதுகுறித்தெல்லாம் மல்லிகா கவலைப்படவும் இல்லை. நான் ஒரு நடிகை, எந்த ரோல் கொடுத்தாலும்நடிக்க வேண்டியது தானே என்கிறார்.

திருப்பாச்சியில் விஜய்க்குத் தங்கையாக நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடி த்ரிஷா. மகா நடிகனில்மல்லிகாவுக்கு அரசியல்வாதி வேடமாம். கலெக்டராக இருந்து பின்பு முதல்வராக மாறுகிறாராம். இது எந்தஅளவுக்கு மல்லிகாவின் வளர்ச்சிக்கு ஒத்துப் போகும் கேரக்டராக இருக்கும் என்று தெரியவில்லை.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் பெயர் சூட்டப்படாத ஒரு படத்தில், துள்ளுவதோ இளமை புகழ் அபிநய்க்குஜோடியாக நடிக்கிறார். படத்தின் ஹீரோ ஜெயம் ரவி. அவருக்கு ஜோடி மலையாளப் புதுமுகம் ரேணுகா மேனன்.

கேரளத்து சிட்டான மல்லிகாவின் இயற்பெயர் ரீஜா வேணுகோபால். இவருக்குத் தமிழ் படமென்றால் உயிராம்.அதுவும் குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு பாடலுக்கு ஆயுட்கால அடிமையாம்.

முதலமைச்சர் கேரக்டரில் எல்லாம் நடிக்கிறீர்களே, நிஜத்தில் ஆள் எப்படி என்று கேட்டால்,

சின்ன வயசிலிருந்து நான் ரொம்பவும் துணிச்சலான பார்ட்டி. யாருக்கும், எதற்கும் பயப்பட மாட்டேன்.பார்க்கத்தான் நான் பொம்பளை, ஆனால் உள்ளத்துல ரெண்டு ஆம்பளைக்கு சமம் என்று கூறும் மல்லிகா,தன்னிடம் பேசவே ஆண்கள் பயப்படுவார்கள் என்றும் பெருமிதமாக கூறுகிறார்.

என்னுடைய கேரக்டருக்கு எந்த ஆணுமே காதலனாக கிடைக்க மாட்டான் என்று ஆதங்கமாக கூறும் மல்லிகா,காதலர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள். ஆனால் அவர்களுக்குள் ஈகோ மட்டும் வந்து விடக் கூடாது. வந்தால்அவ்வளவுதான் என்று அட்வைஸும் தருகிறார்.

சின்ன வயசில் தென்னை மரத்தில் ஏறி இளநீர்க் காய்களை பறித்துப் போட்டு பெற்றோரை அசத்தினாராம் மல்லிகா.அதற்காக அம்மாவிடம் திட்டு கூட கிடைத்ததாம். இப்போதும் தனது கேரள வீட்டில் உள்ள தென்னை மரங்களில்ஏற மல்லிகா ரெடி தானாம். பலே பார்ட்டிதான் !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil