»   »  பிஸியாத்தான் இருக்கார் மல்லிகா !

பிஸியாத்தான் இருக்கார் மல்லிகா !

Subscribe to Oneindia Tamil

ஆட்டோகிராபில் அறிமுகமாகி திருப்பாச்சி மூலம் பிரபலமடைந்துள்ள கேரளத்து கப்பைக்கிழங்கு மல்லிகாவும் பிசியாகத் தான் இருக்கிறார்.

கருப்பாக இருந்தாலும், களையாகவே இருக்கும் மல்லிகாவுக்கு பெரிய கனவுகள் எல்லாம் ஏதுமில்லை. ஹீரோயினா தான் நடிப்பேன் என்றுஎதையாவது பேசாமல், என்ன வாய்ப்பாக இருந்தாலும் சரி, பணம் குடுக்கிற கம்பெனியா இருந்தால் நடிக்கத் தயார் என்கிறார்.

இதனால் சத்யராஜின் மகா நடிகன் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் தங்கையாக திருப்பாச்சியிலும் நடித்து முடித்துவிட்டார்.

திருப்பாச்சியில் ஹீரோயினாக வந்து போன த்ரிஷாவை விட மல்லிகாவின் ரோல்தான் மிகவும் பேசப்படுகிறது. இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததன்விளைவாக இப்போது கை நிறைய படங்களுடனும், வாய் நிறைய பல்லுடனுடன் காணப்படுகிறார் மல்லிகா.

இப்போது அவரது கையில 3 தமிழ்ப் படங்களும், ஒரு குறும்படமும் உள்ளதாம். ஒன்னும் ஒன்னும் நாலு, காதல் நகர் ஆகிய படங்களும் இன்னொருபெயரிடப்படாத படத்திலும் மல்லிகா நடித்துக் கொண்டிருக்கிறார்.

கவர்ச்சி காட்டுவது எனக்கு அறவே பிடிக்காது, எவ்வளவு பணம் கொடுத்தாலும் அப்படிப்பட்ட ரோல்களில் நடிக்கவே மாட்டேன் என்றுரொம்பவே வெட்கத்துடன் கூறுகிறார் மல்லிகா. நல்ல ரோல்களில் நடித்து இன்னொரு ஷோபா என்று பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் என்லட்சியம் என்கிறார்.

இயக்குனர் மனோபாலா இவரது நடிப்பைப் பார்த்து வியந்து போய் தான் தயாரிக்கும் குறும்படத்தில் நடிக்க அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார்.

எப்போ வருவாளோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படத்தில் மல்லிகாவுக்கு அட்டகாசமான ரோலாம். இந்தப் படத்திற்காக வாரணாசியில்15 நாட்கள் ஷூட்டிங் போய் விட்டுத் திரும்பியிருக்கிறாராம் மல்லிகா.

இந்தப் படத்தின் மூலம் மல்லிகா தேசிய அளவில் ஏதாவது விருதை வென்றாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

தமிழோடு, அப்படியே மலையாளத்திலும் ஏதாவது சான்ஸ் கிடைக்குமா என்று நூல் விட்டுக் கொண்டே இருக்கும் மல்லிகாவுக்கு தெலுங்கில் சான்ஸ் தேடரொம்பவே பயமாம்.

சமூக சேவகி வேடம் கொடுத்தாலும் கூடவே ஒரு ஈரசேலை- மழை டான்ஸையும் கோர்த்துவிட்டு விடுவார்கள் என்பதால், தெலுங்கில் சான்ஸ்தேடும் விஷப் பரிட்சையே எடுக்கப் போவதில்லையாம் மல்லிகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil