»   »  படிக்கத் துடிக்கும் நடிகைகள்!

படிக்கத் துடிக்கும் நடிகைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Bhanu

தமிழிலும், மலையாளத்திலும் கலக்கிக் கொண்டிருக்கும் பல நடிகைகளுக்கு திடீரென படிப்பு மீது காதல் பிறந்துள்ளது. நடிப்பை விட்டு படிக்கப் போக துடித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

முதலில் பானு. இவர் தாமிரபரணி படத்தில் நடிக்க வந்தவர். மலையாளத்து சேச்சியான பானு, முதல் படத்தோடு தமிழை விட்டு ஒதுங்கி விட்டார். படிக்கப் போவதாக காரணமும் கூறினார். முக்தா என்கிற இயற் பெயருடைய பானு, மலையாளத்திலும், தமிழிலும் தலா ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்தவர்.

தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பூச்சாண்டி என்கிற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இருந்தாலும் தொடர்ந்து படிக்கத் திட்டமிட்டிருப்பதால் புதுப் படங்கள் எதையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லையாம்.

ஒரு வேளை ஒரு வருடத்திற்குத் தேவையான ட்யூஷன் பீஸை தேற்றுவற்காக அவ்வப்போது நடிக்கிறாரோ?

அடுத்து நவ்யா நாயர். மலையாளத்தில் டாப் ஸ்டார்களில் ஒருவரான நவ்யா நாயர் கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை தமிழிலும் கூட நிறையப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர்.

இப்போது ஓபன் யுனிவர்சிட்டியில், எம்.பி.ஏ படிக்கிறார் நவ்யா. படிப்பை முடிப்பதற்காக நடிப்புக்கு சின்ன இடைவெளி விட்டுள்ளார். மலையாளத்தில் பாலாவுடன் எஸ்.எம்.எஸ். என்ற படத்தில் மட்டும் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

அதேபோல மலையாலத்து சம்விருத்தாவும் எம்.பி.ஏ படித்து வருகிறாராம். எர்ணாகுளத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இவர் படிக்கிறார். அதேசமயம் படித்துக் கொண்டே நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார் சம்விருத்தா.

ரம்யா நம்பீசனும் கூட இளநிலை பட்டப் படிப்பில் படித்துக் கொண்டே கிடைக்கிற கேப்பில் நடித்துக் கொடுத்தும் அசத்திக் கொண்டிருக்கிறார்.

நல்லா படிங்க, நல்லா நடிங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil