»   »  மந்திராவின் மயக்கும் டிரஸ்

மந்திராவின் மயக்கும் டிரஸ்

Subscribe to Oneindia Tamil

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்து ரசிப்பவர்கள் ஆட்டததை விட தொகுப்பாளினியாக வந்து கலக்கும் மந்திரா பேடியைத்தான் படு ஜாலியாக ரசிக்கிறார்கள். அப்படி ஒரு அம்சமான தோற்றத்துடன் வந்து உள்ளங்களை வசீகரிக்கிறார் மந்திரா.

கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை டிவியில் பார்த்து ரசித்தவர்களுக்கு மந்திரா போட்டு வந்த கலக்கல் காஸ்ட்யூம்கள் இன்னும் மறந்திருக்காது. அப்படி ஒரு அமர்க்களமான ஆடையில் வந்து நெஞ்சங்களை அள்ளிச் சென்றார் மந்திரா.

இந்த முறையும் தனது பாணி உைடயில் வந்து இம்சிக்க ஆரம்பித்துள்ளார் மந்திரா. கடந்த முறையைப் போல இந்த முறையும் அசத்தல் டிரஸ்ஸுடன்தான் வந்து வர்னணை ெசய்து வருகிறார் மந்திரா.

இந்த உலகக் கோப்பைப் போட்டி வர்னணைக்காக சிறப்பு உடைகளை வடிவமைத்துள்ளாராம் மந்திரா. சிறப்பு பிளவுஸ், சேலை என அத்தனையும் மந்திராவுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

கிரிக்ெகட் வீரர்களின் கையெழுத்து அடங்கிய சேலை, சில்லென்று சிலிர்க்க வைக்கும் பிளவுஸ் என பட்டையைக் கிளப்புகிறார் மந்திரா.

உலகக் கோப்பைப் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வருகிறது. எனவே அடுத்த நான்கு வருடங்களுக்கும் நம்மை ரசிகர்கள் மறக்கக் கூடாது. அதனால்தான் இப்படி சிறப்பு உடைகளை வடிவமைத்து அதை அணிகிறேன்.

ஆனால் இந்த உடையில் கவர்ச்சி இருக்காது, ஆபாசம் இருக்காது. மாறாக கிரிக்கெட் உணர்வை வெளிப்படுத்தும் வகையில்தான் இது இருக்கும் என்றும் சொல்லி புல்லரிக்க வைக்கிறார் மந்திரா.

கிரிக்கெட் உணர்வை வெளிப்படுத்தினால் ஓ.கே.தான், வேறு உணர்வுகளை கிளப்பி விடாமல் இருந்தால் சரி

Please Wait while comments are loading...