»   »  12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கும் மந்திரா பேடி!

12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்கும் மந்திரா பேடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவர்ச்சி நாயகியாக நடித்து கலங்கடித்த மந்திரா பேடி 12 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் திரைப்படத்தில் மீண்டும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியில் சீரியலில் நடித்து தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர் மந்திரா பேடி. 2004ம் ஆண்டு வெளியான சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்தார். ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்கினார். இவரது கவர்ச்சி உடை உலக பிரசித்தமானது.

Mandira bedi comes back to Tamil Movie

12 ஆண்டுகளுக்குப் பின்னர் அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கும் அடங்காதே படத்தில் ஜிவி பிரகாஷ், சுரபி, சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப்படத்தில் போலீஸ் வேடத்தில் மந்திரா பேடி நடிக்கிறாராம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஃபுட்சால் கால்பந்து பிரிமியர் லீக் போட்டிகள் நடைபெற்றன. நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த கால்பந்து போட்டியின் தொடக்க நிகழ்ச்சியை கவர்ச்சி தொகுப்பாளினி மந்திரா பேடி தொகுத்து வழங்கினார். அப்போதே அவர் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

12 ஆண்டுகளக்குப் பின்னர் தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க வருகிறார் மந்திரா பேடி. இந்த கேரக்டர் வட இந்திய பெண்ணின் கேரக்டர் அல்ல, ஆனால் ரொம்ப ஒல்லியாக அல்லாத, ஓரளவு வயதான கேரக்டர் என்பதால் மந்திரா பேடி சரியாக இருப்பார் என்று தோன்றியதால் அவரை ஒப்பந்தம் செய்ததாக படத்தின் இயக்குநர் கூறியுள்ளார். மந்திரா பேடி சரத்குமாரின் ஜோடி இல்லை என்றும், சரத்குமார் படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ளதாகவும் சண்முகம் முத்துசாமி கூறியுள்ளார்.

English summary
Mandira Bedi is all set to return to Kollywood. She will be seen as a cop in Adangathey, which has GV Prakash Kumar and Sarath Kumar in the lead roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil