Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஒரு கோடி ரூபாய்க்கு சொகுசு கார் வாங்கிய மணிரத்னம் பட நடிகை...தீயாய் பரவும் போட்டோஸ்
சென்னை : மணிரத்னம் பட நடிகை சமீபத்தில் ரூபாய் ஒரு கோடிக்கு காஸ்ட்லி சொகுசு கார் வாங்கி உள்ளார். இந்த போட்டோக்கள் சமீபத்தில் வெளியாகி, இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
நடிகர் நடிகைகள் கார் வாங்குவது புதிய விஷயம் இல்லை என்றாலும், இந்த நடிகை இவ்வளவு காஸ்ட்லி கார் வாங்கி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது. அதுவும் இந்த கார் பற்றிய தகவல்கள் தான் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
ஏகே 61 ல் அஜித்திற்கு ஜோடி இவரா...அப்போ ரகுல் ப்ரீத் சிங் கிடையாதா?

இவர் தானா அந்த நடிகை
தமிழில் சிரங்காரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அதிதி ராவ் ஹைத்ரி. இந்தி, மலையாளம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் தான் இவர் கோலிவுட்டில் பாப்புலர் ஆக்கியது. பிறகு கெளதம் மேனனின் செக்க சிவந்த வானம், சைகோ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஓடிடி நாயகியா இவர்
கடைசியாக ஹே சினாமிகா படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டதுடன், பாக் ஆபீசிலும் இந்த படம் நல்ல வசூலை பெற்றது. அதிதியுடன் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் போன்றோரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு அதிதி நடித்த 3 படங்கள் நெட்ஃபிளிக்சில் ரிலீசானது.

என்னது இந்த காரை வாங்கிருக்காரா
அதிதி நேற்று தனது இன்ஸ்டாகிராமில் Audi Q7 XUV கார் வாங்கியதை போட்டோவுடன் பகிர்ந்திருந்தார். ப்ளூ கலர் கார் அருகே நின்று அதிதி போஸ் கொடுத்த போட்டோக்கள் செம வைரலாகி வருகிறது. சோஷியல் மீடியாவில் மிக அதிகமானவர்கள் இந்த போட்டோவை பகிர்ந்து வருகிறார்கள்.

இவ்வளவு காஸ்ட்லி காரா
இந்த சொகுசு காரின் விலை வரியுடன் சேர்த்து ரூ.95.6 லட்சம் முதல் ரூ.1.05 கோடி. காரின் மாடலுக்கு ஏற்றது போல் விலையும் மாறுபடும். தற்போது அதிதி வாங்கி உள்ளது லேட்டஸ்ட் வெர்சன். Audi Q7 மாடல். இது இந்தியாவிற்கு மிக புதியது. இந்த கார் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே கடந்த ஓராண்டாக செம பாப்புலரான மாடல் இது.
Recommended Video

வாயை பிளக்கும் நெட்டிசன்கள்
மும்பையில் உள்ள ஷோ ரூம் முன்பு, ஊழியர்கள் இருவரிடம் இருந்து கிஃப்ட் ஹாம்பர் வாங்குவது, காருக்கு பூஜை செய்வது போன்ற போட்டோக்களை அதிதி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதற்காக அதிதிக்கு வாழ்த்து சொன்னவர்களை விட, காரை பார்த்து வாயை பிளந்தவர்கள் தான் அதிகம். இந்த காஸ்ட்லி கார் மீது அதிதிக்கு இவ்வளவு லவ்வா என பலர் கேட்டு வருகின்றனர்.