»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

காட்மாண்டு:

2001 ம் ஆண்டு திருமணம் செய்து கொள்வேன் என்று இந்தித் திரைப்படத் துறையின் முன்னணி நடிகை மனிஷா கொய்ராலா கூறினார்.

தனது திருமணம் குறித்து மனிஷா கொய்ராலா நேபாளத்தில் வெளியாகும் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டி:

2001 ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டில் வாழ்க்கையில் செட்டில் ஆகத் தீர்மானித்திருக்கிறேன். நடிக்க வந்ததால் தடை பட்டுப் போன எனது படிப்பைதிருமணத்துக்குப் பிறகு தொடரவுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இப்போதெல்லாம், நேபாள பத்திரிக்கைகளில் மனிஷாவின் மனம் கவர்ந்த காதலரும், நேபாளத்திற்கான ஆஸ்திரேலியத் தூதருமான கிறிஸ்பின்கான்ரோயினும், மனிஷாவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்கள்தான் அலங்கரிக்கின்றன.

இதுகுறித்து மனிஷாவின் காதலரின் அலுவலக ஊழியர் ஒருவர் கூறுகையில், மனிஷாவும், கிறிஸ்பின்னும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்று தெரிகிறது.

மனிஷாவின் தாய், தனது வருங்கால மருமகனுடன் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு ராணி போல், தூதரக ஊழியர்களிடம், மனிஷாவின் தாய்உத்தரவு போடுகிறார் என்றார்.

என்ன சொல்கிறார் மனிஷா?

இந்தியப் பத்திரிக்கைகளில் என்னைப்பற்றி கன்னாபின்னா வென்று எழுதுகிறார்கள். யார் யாருடன் எல்லாமோ தொடர்பு படுத்தி எழுதுகிறார்கள்.அவர்களை நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை.

அவர்கள் எது வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளட்டும். ஆனாலும் அவர்கள் எழுதுவது டூ மச்.

லண்டனில் தத்துவம் குறித்துப் படிக்க விரும்புகிறேன். சில காலம் வெளிநாடுகளில் தங்குவேன். அதற்குப்பிறகு நேபாளத்தில் செட்டில் ஆகி விடுவேன்.

இந்தியத் திரைப்படத் துறையில் 10 வருடங்களாகப் பணியாற்றி வருகிறேன். இனிமேலும் பணி புரிய விரும்புகிறேன். அப்புறம் திரையுலகுக்கு குட்பை சொல்லிவிடுவேன்.

2001ல் கண்டிப்பாகத் திருமணம் செய்து கொள்வேன் என்றார் பபிள்காம் கன்னம் கொண்ட நடிகை மனிஷா கொய்ராலா.

நடிகை மனிஷா கொய்ராலா நேபாளத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மாடலிங் செய்தார். பின்னர் சில நேபாளத் திரைப் படங்களில் நடித்தார். ஆனால் மனிஷாநடித்த நேபாளப் படங்கள் அனைத்தும் பிளாப் ஆகி விட்டன.

பின்னர் இந்தித் திரைப்படத் துறைக்கு ஹை ஜம்ப் ஆனார். பெரும்பாலான படங்களில் நடித்து விரல் விட்டு எண்ணக் கூடிய முன்னணி நடிகைகளில் ஒருவராகி பிஸி யாகிவிட்டார் மனிஷா.

நம்மூர் மணிரத்தினம், ஷங்கர் ஆகிய ஹைடெக் டைரக்டர்களின் உள்ளம் கவர்ந்த நடிகை மனிஷா. இவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் செய்தியால்இவரது ரசிகர்களின் பி.பி.எகிறும் என்பதில் சந்தேகமில்லை.

ஐ.ஏ.என்.எஸ்.

Read more about: manisha koirala, nepal

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil