»   »  இரண்டாவது திருமணத்துக்கு தயாராகும் மனிஷா கொய்ராலா!

இரண்டாவது திருமணத்துக்கு தயாராகும் மனிஷா கொய்ராலா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபல இந்தி நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு இந்த ஆண்டு இறுதியில் இரண்டாவது திருமணம் நடக்கவிருக்கிறது.

மணிரத்னத்தின் பம்பாய், உயிரே, ஷங்கரின் முதல்வன், ரஜினியின் பாபா உள்ளிட்ட ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மனிஷா கொய்ராலா. இந்தியில் முன்னணி நாயகியாகத் திகழ்ந்தவர்.

Manisha Koirala announces her second marriage

நேபாளத்தைச் சேர்ந்த மனிஷா கொய்ராலாவுக்கும், தொழில் அதிபர் சாம்ராட் தகால் என்பவருக்கும் 2010-ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார். ஆனால் இரண்டு ஆண்டுகளிலேயே கணவருடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2012-ல் விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.

அதன் பிறகு மனிஷா கொய்ராலாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக நியூயார்க் சென்று பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்று இந்தியா திரும்பினார். தற்போது அவர் மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். தமிழில் ஷாம் ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார்.

இப்போது யார் துணையும் இல்லாமல் தனிமையில் இருப்பது மன அழுத்தத்தைத் தருவதாகக் கூறியுள்ள மனிஷா, மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் முடிவிலிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

English summary
Actress Manisha Koirala has announced that she would marry again at the end of this year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil