»   »  மனீஷா கொய்ராலாவுக்கு திருமணம்!

மனீஷா கொய்ராலாவுக்கு திருமணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Manisha Koirala
மாமியார், அம்மா வேடங்கள் வருமளவுக்கு மார்க்கெட் இறங்கிவிட்டதால், திருமணம் செய்து கொள்கிறார் மனீஷா கொய்ராலா.

பம்பாய் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மனீஷா கொய்ராலா. கமலுடன் இந்தியன், அர்ஜுன் ஜோடியாக முதல்வன், ரஜினியுடன் பாபா போன்ற படங்களில் நடித்தார். தற்போது தனுசுடன் மாப்பிள்ளை படத்தில் மாமியாராக நடித்து வருகிறார்.

நயன்தாராவுக்கு அம்மாவாக மலையாளப் படத்தில் நடிக்கிறார்.

மனீஷாவுக்கு சொந்த ஊர் நேபாளத்தில் உள்ள காட்மாண்டு. 39 வயதாகும் இவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணமகன் பெயர் சாம்ராட் டெகால்.

வருகிற ஜூன் 19ம் தேதி திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

காட்மாண்டுவில் உள்ள கோகர்னா காட் பகுதியில் சிவபெருமான் குடி கொண்டிருப்பதாக ஐதீகம். இந்த காட்டுக்குள் அமைந்துள்ள ஒரு விடுதியில்தான் திருமணம் நடைபெறுகிறது. முன்னதாக 18ம் தேதி நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் அங்கேயே நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு விமானத்தில் வந்து இறங்குபவர்களை காட்மாண்டு விமான நிலையத்தில் இருந்து காட்டுக்குள் அழைத்துச் செல்ல சொகுசு கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ், இந்தி மற்றும் மலையாள நடிகர், நடிகைகள் இந்த திருமணத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திருமணத்துக்கு ரஜினியையும் அழைத்துள்ளனர்.

20ம் தேதி காட்மாண்டு நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil