»   »  சொப்பன சுந்தரியை யாரு வச்சிருக்கா...?

சொப்பன சுந்தரியை யாரு வச்சிருக்கா...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை மனிஷா யாதவுக்கும் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடக்க உள்ளதாம்.

பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 படம் மூலம் நடிகையானவர் மனிஷா யாதவ். பெங்களூரை சேர்ந்த மனிஷா மாடலிங்கும் செய்து வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் மனிஷா நடித்திருந்தார்.

சொப்பன சுந்தரி

சொப்பன சுந்தரி

சென்னை 28-2 படத்தில் சொப்பன சுந்தரி உன்னை யாரு வச்சிருக்கா என்ற பாடலுக்கு மனிஷா யாதவ் ஜெய், அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா உள்ளிட்டோருடன் சேர்ந்து செம ஆட்டம் போட்டிருந்தார்.

மனிஷா

மனிஷா

சென்னை 28-2 படத்திற்கு பிறகு மனிஷாவை ரசிகர்கள் சொப்பன சுந்தரி என்றே அழைக்கிறார்கள். மனிஷா புதிய படங்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை ஏற்க மறுக்கிறாராம்.

திருமணம்

திருமணம்

மனிஷா யாதவ் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலித்து வருகிறாராம். அவர்கள் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்களாம்.

பிசி

பிசி

திருமண வேலைகளில் மனிஷா படுபிசியாக இருக்கிறாராம். அதனால் தான் புதுப் படங்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை ஏற்க மறுக்கிறாராம். தான் ஏற்கனவே பணியாற்றிய இயக்குனரின் படத்தில் கூட நடிக்க மறுத்துவிட்டாராம்.

English summary
Actress Manisha Yadav is getting married to a Bangalore based businessman early next year. So, she is not accepting movie offers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil