ஆத்தாடி.. அந்த வளைவுகளை வர்ணிக்க வார்த்தையே இல்ல.. மனிஷா யாதவின் லேட்டஸ்ட் போட்டோ!
சென்னை: பெங்களூரை சேர்ந்தவர் மனிஷா யாதவ். மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். தற்போது இவருக்கு பட வாய்ப்பு இல்லாததால் இணையத்தில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.
நடிகை மனிஷா யாதவ், தெலுங்கில் தில் ராஜு தயாரித்த டுனேகா டுனேகா என்கிற படத்தில் நடித்தார். பின் தமிழுக்கு வந்த மனிஷா யாதவ், சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நடித்தார். இப்படத்தில் மிகவும் அழுத்தமான வேடத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய மனிஷா யாதவ்வுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அடுத்ததாக ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக த்ரிஷா இல்லேனா நயன்தாரா படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் கிளாமர் ஹீரோயினாகவும் அவதாரம் எடுத்த மனிஷா யாதவ் கவர்ச்சியில் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

நடிகை மனிஷா யாதவ்: அந்த படத்திற்கு பின் படவாய்ப்பு இல்லாததால், இயக்குனர் வெங்கட் பிரபு, தான் இயக்கிய சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் 'சொப்பன சுந்தரி 'என்கிற ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தார். இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதால், இவரை ரசிகர்கள் சொப்பன சுந்தரி என்றே செல்லமாக அழைத்தனர். இவ்வாறு தொடர்ந்து பல்வேறு விதமான வேடங்களில் நடித்தாலும், இவருக்கென எதிர்பார்த்த அங்கீகாரம் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. தற்போது இவர் கைவசமும் ஒரு படம் கூட இல்லை.
சர்ச்சை: இருந்தபோதும், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி பின் அப்படத்தில் இருந்து மனிஷா விலகினார். அவர் விலகியதற்கு காரணம் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் அழைத்துச்சென்ற சீனு ராமசாமி அவருக்கு தொல்லை அளித்தது தான் என பிஸ்மி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், சீனு ராமசாமி அதை மறுத்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு மனிஷா யாதவ் சீனு ராமசாமி சார் உண்மையை பேசுங்கள் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார். இதன்மூலம் சீனு ராமசாமி மீதான குற்றச்சாட்டை மனிஷா யாதவ் ஒப்புக்கொண்டார்.
ஆத்தாடி என்ன அழகு: இப்படி பல பஞ்சாயத்துக்கள் நடந்த போதும், அதைப்பற்றி கவலைப்படாமல், மனிஷா யாதவ் ஜாலியாக இத்தாலி, தாய்லாந்து என பல சுற்றுலா தளங்களுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்து இருக்கிறாள். தற்போது மனிஷா யாதவ் தனது இன்ஸ்டாகிராமில் கலக்கலாக நடனம் ஆடி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அந்த வளைவுகளை வர்ணிக்க வார்த்தையே இல்ல என மனிஷா யாதவை வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











