»   »  எல்லா படமும் கையைவிட்டு போச்சு- டிசைனிங் ஷோரூம் துவங்கிய மனிஷா யாதவ்!

எல்லா படமும் கையைவிட்டு போச்சு- டிசைனிங் ஷோரூம் துவங்கிய மனிஷா யாதவ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: தமிழில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமான நடிகை மனிஷா யாதவ், தற்போது பெங்களூருவில் டிசைனிங் ஷோரூம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

வழக்கு எண் 18/9 படத்திற்கு பின் ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை மனிஷா யாதவ்.

எனினும், வரிசையாக வெளிவந்த எந்த படமுமே அவர் பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறாததால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்,

நிரந்தர இடம் கிடைக்கும்:

நிரந்தர இடம் கிடைக்கும்:

பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் மீண்டும் தனக்கொரு நிரந்தர இடம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்தார் மனிஷா.

டேமேஜான இமேஜ்:

டேமேஜான இமேஜ்:

ஆனால், அப்படம் வியாபார ரீதியாக மட்டுமே வெற்றியை தேடி தந்துள்ளது. மற்றபடி அவருடைய இமேஜையே டேமேஜ் செய்துவிட்டது அப்படம்.

ஒரு படம் கூட இல்லை:

ஒரு படம் கூட இல்லை:

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாம் என்று ஆசையுடன் இருந்த மனிஷாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் வராதது வருத்தத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

டிசைனிங் ஷோரூம் போதும்:

டிசைனிங் ஷோரூம் போதும்:

இதனால் சினிமாவை விட்டு விலகி விடலாம் என்று முடிவு செய்துள்ள மனிஷா பெங்களூரில் பெண்களுக்கான ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வடிவமைக்கும் டிசைனிங் ஷோரூம் ஒன்றை தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

English summary
Actress Manisha yadav starts a new designer showroom in Bangalore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil