»   »  இந்த சிம்புவோட நடிச்ச படம் ரிலீஸாகவே மாட்டேங்கிது: விரக்தியில் டாடிக்கு போன் செய்த நடிகை

இந்த சிம்புவோட நடிச்ச படம் ரிலீஸாகவே மாட்டேங்கிது: விரக்தியில் டாடிக்கு போன் செய்த நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அச்சம் என்பது மடமையடா படத்தால் விரக்தியடைந்து தனது தந்தைக்கு போன் செய்து புகார் தெரிவித்ததாக நடிகை மஞ்சிமா மோகன் கூறியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த மஞ்சிமா மோகன் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயின் ஆகியுள்ளார்.


முதல் படமே இழு இழு என இழுத்து ஒரு வழியாக வரும் 11ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படம் குறித்து மஞ்சிமா கூறுகையில்,


விரக்தி

விரக்தி

அச்சம் என்பது மடமையடா படம் ரிலீஸாக தாமதம் ஆனது. இதனால் விரக்தி அடைந்து என் தந்தைக்கு போன் செய்தேன், கவுதமிடமும் கேட்டேன். அவர் படம் தாமதமானதற்கான காரணத்தை கூறிய பிறகே புரிந்தது. சில நேரம் நான் பொறுமையாக இருக்க வேண்டும்.


நடிகை

நடிகை

மலையாள திரையுலகில் ஒளிப்பதிவாளராக இருக்கும் என் தந்தைக்கு நான் நடிகையாவது பிடிக்கவில்லை. பல நடிகைகளின் வாழ்க்கை போராட்டத்தை பார்த்த அவர் தன் மகள் நடிகையாவதை விரும்பவில்லை.


அம்மா

அம்மா

நடிக்கவே போக வேண்டாம் என்று கூறிய என் தந்தையை நானும், என் அம்மாவும் தான் பேசிப் பேசி மாற்றினோம். அதன் பிறகே நடிக்க வந்தேன்.


சிம்பு

சிம்பு

சிம்பு ஒரு அற்புதமான நடிகர். நான் கமர்ஷியல் படங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் உடலை காட்டி நடிக்க விருப்பமில்லை என்று மஞ்சிமா தெரிவித்துள்ளார்.


English summary
Actress Manjima Mohan said that she got frustrated when her Kollywood debut movie Acham Enbathu Madamaiyada got delayed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil