»   »  'அந்த' கிக்குக்காக கதையை கேட்காமல் சிம்பு படத்தில் நடித்த மஞ்சிமா

'அந்த' கிக்குக்காக கதையை கேட்காமல் சிம்பு படத்தில் நடித்த மஞ்சிமா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவுதம் மேனன் படத்தில் நடிக்கும் கிக்குக்காகவே அச்சம் என்பது மடமையடா கதையை கேட்காமலேயே நடிக்க ஒப்புக் கொண்டதாக மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.

கவுதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால் மஞ்சிமா மோகன் மகிழ்ச்சியில் உள்ளார். படம் ஓராண்டு தள்ளி ரிலீஸானாலும் வெற்றி கிடைத்துள்ளதால் நிம்மதியில் உள்ளார்.

இந்நிலையில் அவர் பிரபல ஆங்கில செய்தி இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

கிக்

கிக்

நான் கவுதம் மேனனின் படங்கள், அவரின் ஹீரோயின்களான ஜோகிதா, த்ரிஷாவை பார்தது வளர்ந்தவள். கவுதம் மேனன் படத்தில் நடிக்கிறோம் என்ற கிக் எனக்கு. அதனால் கதையை கேட்காமலேயே நடிக்க ஒப்புக் கொண்டேன்.

சிம்பு

சிம்பு

சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என கவுதம் மேனன் என்னிடம் கேட்டதும் கனவு நனவாகிவிட்டது. கவுதம் நான் நடித்த மலையாள படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டே ஆடிஷனுக்கு வருமாறு கூறினார்.

கவுதம்

கவுதம்

ஸ்கூல் பிள்ளை மாதிரி முதலில் அவரை பார்த்து பயந்தேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவர் என்னிடம் பழகிய விதத்தால் பயம் போய்விட்டது. அச்சம் என்பது மடமையடாவின் தெலுங்கு பதிப்பிலும் என்னை நடிக்க வைத்தார்.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் ஓராண்டு தள்ளிப் போனது. மலையாளத்தில் என் முதல் படமான ஒரு வடக்கன் செல்ஃபி ஹிட்டாகியும் அங்கு எனக்கு பட வாய்ப்புகள் இல்லை.

English summary
Manjima Mohan said that she agreed to act in AYM without even hearing the script just for the kick of doing Gautham Menon movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil