»   »  கோலிவுட் வரும் மெகா ஹீரோயின்: கலக்கத்தில் நடிகைகள்

கோலிவுட் வரும் மெகா ஹீரோயின்: கலக்கத்தில் நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாள நடிகை மஞ்சு வாரியர் இயக்குனர் அறிவழகனின் படத்தில் நடிக்க உள்ளாராம்.

ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அறிவழகன் ஈரம் படம் மூலம் இயக்குனர் ஆனார். வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கியவர்.

தற்போது அவர் ஹீரோயினை மையமாக வைத்து ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்க உள்ளார்.

மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர்

அறிவழகனின் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருப்பது வேறு யாரும் அல்ல மலையாள நடிகை மஞ்சு வாரியர். ஹவ் ஓல்டு ஆர் யூ? படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தவர் மஞ்சு.

திலீப்

திலீப்

மலையாள நடிகர் திலீப்பை காதல் திருமணம் செய்த பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார் மஞ்சு. விவாகரத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த மஞ்சுவை மலையாள திரையுலகம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது.

அறிவு

அறிவு

என் படத்தின் ஹீரோயின் தைரியமான பெண். அந்த கதாபாத்திரத்தை சில நடிகைகளாலேயே செய்ய முடியும். மஞ்சு வாரியரின் மலையாள படங்களை பார்த்த பிறகு அவர் தான் என் படத்திற்கு சரியானவர் என்று முடிவு செய்தேன் என்கிறார் அறிவழகன்.

சம்பளம்

சம்பளம்

மலையாள திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை மஞ்சு வாரியர். கொடுத்த கதாபாத்திரத்தை நச்சுன்னு நடித்துக் கொடுப்பதற்கு பெயர் போனவர். அவர் தமிழ் திரையுலகிற்கு வருவது சில நடிகைகளுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது.

English summary
Malayalam actress Manju Warrier is set to make her debut in Kollywood through director Arivazhagan's upcoming action thriller.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil