»   »  விவாகரத்துக்குப் பிறகு... சூர்யா படத்தில் நடிக்கும் மஞ்சு வாரியார்

விவாகரத்துக்குப் பிறகு... சூர்யா படத்தில் நடிக்கும் மஞ்சு வாரியார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விவாகரத்துக்குப் பிறகு முதல் முறையாக தமிழில் சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் மஞ்சு வாரியர்.

மலையாளத்தில் முன்னணியில் இருந்த நடிகை மஞ்சு வாரியர், பிரபல நடிகர் திலீப்பை திருமணம் செய்தார். 16 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார்.

Manju Warrier plays lead role in Surya movie

நேற்றுதான் இருவருக்கும் நீதிமன்றம் விவாகரத்தை அறிவித்தது.

மஞ்சு வாரியர் தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். மலையாளத்தில் நடித்த ‘ஹவ் ஓல்டு ஆர் யு' படம் வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தமிழில் ஜோதிகா நடிக்க ரீமேக் ஆகி உள்ளது. விரைவில் இது ரிலீசாக உள்ளது.

ஹவ் ஒல்டு ஆர் யு படத்தில் மஞ்சு வாரியரின் நடிப்பு சூர்யாவுக்கு மிகவும் பிடித்துவிட்டதால், அவர் தயாரிக்க உள்ள படத்தில் மஞ்சு வாரியரை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.

English summary
Actress Manju Warrier is playing lead role in Surya's own production.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil